சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது -ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு

மும்பை : சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிசிசிஐயின் பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு வழங்கப்படவுள்ளது.

சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான பாலி உம்ரிகர் விருது பூனம் யாதவ்விற்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோல கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் அஞ்சும் சோப்ராவிற்கு வழங்கப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெறுகிறது

மும்பையில் நடைபெறுகிறது

பிசிசிஐ விருது வழங்கும் விழா மும்பையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் யாருக்கெல்லாம் விருதுகள் வழங்கப்படவுள்ளது என்பது குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

2006-07ல் துவக்கம்

2006-07ல் துவக்கம்

கடந்த 2006-07 ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பும்ரா, பூனம் ஜாதவ் தேர்வு

பும்ரா, பூனம் ஜாதவ் தேர்வு

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருதிற்கு ஜஸ்பிரீத் பும்ராவும் மகளிர் கிரிக்கெட்டில் பூனம் ஜாதவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்

பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தில் உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.

ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு

இதனிடையே வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் அஞ்சும் சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

மயங்க் அகர்வால், சபாலி வர்மா தேர்வு மயங்க் அகர்வால், சபாலி வர்மா தேர்வு

மயங்க் அகர்வால், சபாலி வர்மா தேர்வு மயங்க் அகர்வால், சபாலி வர்மா தேர்வு

இதேபோல கிரிக்கெட்டின் அறிமுக வீரர்களுக்கான விருதுக்கு மயங்க் அகர்வால் மற்றும் மகளிர் பிரிவில் சபாலி வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சவுரவ் கங்குலி அறிவிப்பு

சவுரவ் கங்குலி அறிவிப்பு

இதனிடையே, மும்பையில் இன்று மாலை நடைபெறவுள்ள இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வீரேந்தர் சேவாக் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Jasprit Bumrah, Poonam Yadav To Receive Polly Umrigar Award: BCCI
Story first published: Sunday, January 12, 2020, 14:38 [IST]
Other articles published on Jan 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X