இங்கிட்டு டோணி… அங்கிட்டு ஜூலான்- மிதாலி… தென்னாப்பிரிக்காவில் கலக்கும் இந்தியா

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், விக்கெட் கீப்பராக 400 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை கேப்டன் கூல் டோணி சாதனை நிகழ்த்திய அதே நேரத்தில், மகளிர் கிரிக்கெட் அணியின் சீனியரான ஜூலான் கோஸ்வாமி, ஒருதினப் போட்டிகளில் 200 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீராங்கனையானார்.

தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சென்றுள்ளன. மகளிர் பிரிவில் நேற்று நடந்த இரண்டாவது ஒருதினப் போட்டியில் 200வது விக்கெட்டை வீழ்த்தினார் ஜூலான் கோஸ்வாமி.

35 வயதாகும் ஜூலான் கோஸ்வாமி, 2002ல் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கினார். தனது 166வது ஒருதினப் போட்டியில், 200வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், 200 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீராங்கனையாக அவர் திகழ்கிறார்.

ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்தார்

ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்தார்

ஆஸ்திரேலியாவின் கேத்ரின் பிஸ்ட்பாட்ரிக், 180 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது, 181வது விக்கெட்டை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஜூலான் முதலிடத்தைப் பிடித்தார்.

5வது இடத்தில் நீது டேவிட்

5வது இடத்தில் நீது டேவிட்

ஆஸ்திரேலியாவின் லிசா ஸ்தாலேகர் 146 விக்கெட்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இன்டீஸின் அனிசா முகமது 145, இந்தியாவின் நீது டேவிட் 141 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

அதிக வெற்றியை பார்த்தவர்

அதிக வெற்றியை பார்த்தவர்

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தற்போது ஒருதினப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக உள்ளார். நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம், அதிக வெற்றியைப் பார்த்த வீராங்கனையாக அவர் உள்ளார்.

அதிக வெற்றி ஆட்டங்களில் விளையாடியவர்

அதிக வெற்றி ஆட்டங்களில் விளையாடியவர்

நேற்றைய போட்டியோடு, அவர், 109 வெற்றி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டன், 108 வெற்றி ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். அந்த சாதனையை மிதாலி ராஜ் நேற்று முறியடித்தார்.

விருதுகளை குவித்தவர்

விருதுகளை குவித்தவர்

கடந்த, 2002ல் அறிமுகமான ஜூலான் கோஸ்வாமி, 2007ல் ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார். 2010ல் அர்ஜூனா விருதும், 2012ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

கபிலுடன் ஜூலான் சேம் பின்ச்

கபிலுடன் ஜூலான் சேம் பின்ச்

ஆண்கள் கிரிக்கெட்டில், 200வது விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் நம்ம கபில்தேவ்தான். 1991ல் அவர் அந்த சாதனையைப் புரிந்தார். ஜூலான் மற்றும் கபில்தேவ், தங்களுடைய 166வது போட்டியில் இந்த சாதனையைப் புரிந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 8, 2018, 11:38 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற