For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது லிஸ்ட்டிலே இல்லையே.. கோலியின் சாதனைக்கு ஆப்பு வைத்த ஜோ ரூட்.. இங்கிலாந்து, பாக் டெஸ்டில் சம்பவம்

ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது. சிமெண்ட் தரை போல் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தில் ரன் வேட்டை நடைபெற்றது.

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 506 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து 2வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி இன்று தொடங்கியது. இதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் , டி20 போட்டி போல் விளையாடி 18 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.

இது உங்களுக்கு தேவையா?? ஜோ ரூட்டை காப்பி அடித்த விராட் கோலி.. வச்சு செய்யும் ரசிகர்கள்! இது உங்களுக்கு தேவையா?? ஜோ ரூட்டை காப்பி அடித்த விராட் கோலி.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

ரன் வேட்டை

ரன் வேட்டை

இதன் பின்னர் ராபின்சன் 37 ரன்களும்,வில் ஜாக் 30 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் பந்தின் எந்த உயிரும் இல்லை. இதனால், பாகிஸ்தான் அணியும் அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை இழக்காமல் ரன்களை சேர்த்து வருகிறது. தொடக்க வீரர்கள் அப்துல்லாஹ் ஷபிக் 89 ரன்களும் , இமாம் உல் ஹக் 90 ரன்களும் குவிக்க ஆட்டநேரம் முடிவில் பாகிஸ்தான அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்தது.

ஜோ ரூட் சாதனை

ஜோ ரூட் சாதனை

இந்த நிலையில் ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் 23 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தார். இருப்பினும், அவர் 9 ரன்கள் கடந்த போது, . ஐந்து அணிகளுக்கு மேல் பங்கேற்கும் சர்வதேச தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் படைத்தார்.

விராட் கோலி முதலிடம்

விராட் கோலி முதலிடம்

அதாவது, World test championship, ,டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலகக்கோப்பை ,ஆசிய கோப்பை மற்றும் World super League (50 ஓவர் உலககோப்பைக்கான தகுதிச் சுற்று) என அனைத்து தொடர்களையும் சேர்த்து விராட் கோலி 114 போட்டிகள் விளையாடி 5017 ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்தார்.இதில் 6 சதங்களும் 40 அரை சதங்களும் அடங்கும்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

தற்போது இந்த சாதனையை தான் ஜோ ரூட் 78 போட்டிகளில் முறியடித்து இருக்கிறார். அவர் 5121 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 15 சதங்களும், 22 அரை சதங்களும் அடங்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சூப்பர் லீக் போன்ற முறை எல்லாம் இப்போது தான் கொண்டு வரப்பட்டது. இதனால் சச்சின் உள்ளிட்ட பழைய வீரர்கள் யாரும் இந்த பட்டியலில் இல்லை.

Story first published: Friday, December 2, 2022, 22:19 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
Joe root over takes virat kohli record as leading run scorer இது லிஸ்ட்டிலே இல்லையே.. கோலியின் சாதனைக்கு ஆப்பு வைத்த ஜோ ரூட்.. இங்கிலாந்து, பாக் டெஸ்டில் சம்பவம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X