For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பட்டையை கிளப்பிய நியூசிலாந்து.. தனி ஒருவனாக போராடிய பாரிஸ்டோ.. ரோலர் கோஸ்டர் போல் மாறும் ஆட்டம்

லீட்ஸ்: இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோலர் கோஸ்டர் போல் இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டாம் லத்தம் டக் அவுட்டாகினார்.

நியூசிலாந்து வீரர்கள் ஆக்கோரஷமாக பந்துவீசிய போதும் தனி ஆளாக நின்று பாரிஸ்டோ சதம் விளாசி இருக்கிறார். இங்கிலாந்து அணி தடுமாறிய போது எல்லாம் ஒரு கப்பலின் கேப்டன் போல அணியை கரை சேர்த்துள்ளார்.

பெரிய முட்டையை வாங்கிய புஜாரா.. வேலைக்கே ஆகாத நடுவரிசை.. இங்கிலாந்து தொடரில் காத்திருக்கும் அவமானம்பெரிய முட்டையை வாங்கிய புஜாரா.. வேலைக்கே ஆகாத நடுவரிசை.. இங்கிலாந்து தொடரில் காத்திருக்கும் அவமானம்

ஆக்கோரஷ பந்துவீச்சு

ஆக்கோரஷ பந்துவீச்சு

முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் டிரெண்ட் பவுல்ட், தனது அனல் பறக்கும் பந்துவீச்சை வீச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதனை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்தது. இதில் 12வது ஓவரில் வாக்னர் வீசிய போது 2 விக்கெட்டுகளை இழந்தது.

பாரிஸ்டோ சதம்

பாரிஸ்டோ சதம்

இதனையடுத்து, தடுமாறிய இங்கிலாந்து அணியில் பாரிஸ்டோ தனி ஆளாக நின்று அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். மளமளவென பவுண்டரிகளை பாரிஸ்டோ அடிக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. பாரிஸ்டோவுக்கு இங்கிலாந்து பவுலர் ஓவர்டன் நன்கு கம்பெனி கொடுக்க, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். 92 பந்துகளில் சதம் விளாசிய பாரிஸ்டோ, ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும்.

4 சதம்

4 சதம்

55 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோரில் தடுமாறிய இங்கிலாந்து அணி பாரிஸ்டோவின் அதிரடியால் 264 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளது. இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரை விட 65 ரன்களே குறைவாகும். பாரிஸ்டோ 2022ஆம் ஆண்டு மட்டும் 4 சதம் விளாசியுள்ளார். நான்கு சதத்தையும் , இங்கிலாந்து அணி தடுமாறிய போது தான் பாரிஸ்டோ விளாசியுள்ளார்.

மாலுமி பாரிஸ்டோ

மாலுமி பாரிஸ்டோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்த போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்த போதும், நியூசிலாந்துக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்த போதும், தற்போது 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறிய போதும், பாரிஸ்டோ சதம் விளாசி அணியை காப்பாற்றி இருக்கிறார்.

Story first published: Saturday, June 25, 2022, 10:58 [IST]
Other articles published on Jun 25, 2022
English summary
Johnny Baristow brilliant century as England takes a fight back பட்டையை கிளப்பிய நியூசிலாந்து.. தனி ஒருவனாக போராடிய பாரிஸ்டோ.. ரோலர் கோஸ்டர் போல் மாறும் ஆட்டம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X