
அதிரடி வீரர்
ஜாஸ் பட்லர், தற்போது தான் இரண்டாவது அதிவேகமாக 150 ரன்களை விளாசி அசத்தினார். தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் பட்லரை விட அதிவேகமாக ரன் குவிக்கும் வீரர் வேறு யாரும் இல்லை. மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 4 சதம் மற்றும் அதிக ரன் அடித்ததற்காக ஆரஞ்ச் நிற தொப்பியையும் பட்லர் வென்றார்.

தகுதியான நபர்
அப்போதே பட்லரை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது மார்கன் விலகியதால் இங்கிலாந்த அணிக்கே அவர் கேப்டனாக செயல்பட உள்ளார். தற்போது பட்லர் கேப்டனான பிறகு அவருக்கு இருக்கும் முதல் தொடரே இந்தியாவுடன் தான். இதனால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது.

பட்லர் கருத்து
இதனிடையே, கேப்டன் பதவி கிடைத்தது குறித்து பேசிய பட்லர், முதலில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இத்தனை ஆண்டுகள் இருந்த மார்கனுக்கு என்னுடைய நன்றிகள். அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும், தலைவனாகவும் விளங்கினார். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் அனைவருக்கும் மறக்க முடியாத நினைவுகள் ஆகும்.

பட்லர் சாதனை
31 வயதான ஜாஸ் பட்லர் இதுவரை 151 ஒருநாள் போட்டியில் விளையாடி 4120 ரன்களை விளாசி உள்ளார். இதில் 10 சதங்கள் அடங்கும். இதே போன்று 88 டி20 போட்டியில் விளையாடியுள்ள பட்லர் 2140 ரன்களை விளாசி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் பட்லருக்கு காத்திருக்கும் பெரிய சவாலே நடப்பாண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டி தான். கேப்டன்ஷிப் சுமை அவரது பேட்டிங்கை பாதிக்குமா, இல்லை மேலும் வலு சேர்க்குமா என்பது வரும் 7ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் டி20 போட்டியில் தெரியும்.


Click it and Unblock the Notifications











