For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியர் டீம்ல வந்துட்டாரு இல்ல... இனிமே தாறுமாறு தான்... ஹாசல்வுட் மகிழ்ச்சி

சிட்னி : கடந்த டி20 தொடரில் விளையாடாமல் விலகிய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார்.

இந்நிலையில் அவர் பகலிரவு போட்டியில் இணைந்துள்ளது அணிக்கு மிகப்பெரிய பலம் என்று சக பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாசல்வுட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பகலிரவு போட்டியில் விராட்டிற்கு எதிரான பந்துவீச்சை முதலிலிருந்து ப்ரெஷ்ஷாக துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பகலிரவு டெஸ்ட் போட்டி

பகலிரவு டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் வரும் 17ம் தேதி பகலிரவு போட்டி துவங்கவுள்ளது. இதில் பங்கேற்று விளையாடவுள்ள கேப்டன் விராட் கோலி அதையடுத்து தன்னுடைய குழந்தை பிறப்பிற்கென நாடு திரும்பவுள்ளார்.

அடுத்தடுத்து வீழ்த்திய ஹாசல்வுட்

அடுத்தடுத்து வீழ்த்திய ஹாசல்வுட்

இந்நிலையில் ஒருநாள் தொடரின் தொடர்ந்த 4 போட்டிகளிலும் அவரை தொடர்ந்து வெற்றி கொண்ட ஜோஷ் ஹாசல்வுட் தற்போது நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலிலிருந்து ப்ரெஷ்ஷாக அவரை அவுட் ஆக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அணிக்கு சிறந்த பலம்

அணிக்கு சிறந்த பலம்

மேலும் மிட்செல் ஸ்டார்க் பகலிரவு போட்டியில் இணையவுள்ளது அணிக்கு மிகச்சிறந்த பலமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை ஸ்டார்க் விளையாடியுள்ள 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசுவார் என்று ஹாசல்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி20யில் விலகிய ஸ்டார்க்

டி20யில் விலகிய ஸ்டார்க்

சொந்த பிரச்சினைகள் காரணமாக கடந்த டி20 போட்டியில் விளையாடாமல் விலகிய மிட்செல் ஸ்டார்க் தற்போது வரும் 17ம் தேதி துவங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் அவரை இருகரம் கொண்டு வரவேற்பதாக ஹாசல்வுட் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, December 13, 2020, 17:43 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
We welcome Mitchell with open arms -Hazlewood
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X