கிரிக்கெட் வாரிய தலைவராக கவாஸ்கரை நியமித்தது சரியே: நீதிபதி முத்கல்
டெல்லி: ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் காலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சுனில் கவாஸ்கரை உச்சநீதிமன்றம் நியமித்தது சரியான நடவடிக்கை என்று நீதிபதி முத்கல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிங்களில் பிக்ஸிங் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முத்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஐ.பி.எல். போட்டி நடைபெறும் காலத்தில் கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனை பதவி நீக்கம் செய்து கவாஸ்கரை நியமித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி, உச்சநீதிமன்றம் சரியான முறையில்தான் செயல்பட்டுள்ளது. கவாஸ்கர் தமக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் மேற்கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
Story first published: Friday, March 28, 2014, 14:04 [IST]
Other articles published on Mar 28, 2014


Click it and Unblock the Notifications