For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் பதவிக்கு தகுதியே இல்லாதவர் ராகுல்.. வரலாற்று தவறை செய்யும் பிசிசிஐ.. என்ன காரணம்?

கொல்கத்தா: கேப்டன் பதவிக்கு தகுதியே இல்லாத நபர் கேஎல் ராகுல் என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு அணியில் கேப்டன் அதிக ரன்கள் அடித்து, அணி தோற்றுவிட்டால், ஆப்ரேசன் சக்ஸஸ், பட் பேசண்ட் டெட் என்று சொல்வார்களே, அப்படி தான் .

“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்

கேஎல் ராகுலின் கதையும், அப்படி தான் போய் கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் கடந்த 3 முறை 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

ராகுல் vs ஹர்திக்

ராகுல் vs ஹர்திக்

கடைசியாக விளையாடிய 5வது சீசனில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் கேஎல் ராகுல். ஆனால் அவரது அணி தோல்வியை தழுவியது. இதனால் தான் பஞ்சாப் அணி அவரை தக்கவைக்க முயற்சி செய்யவில்லை.புதிய அணிக்காக முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா செயல்பட்ட அளவு கூட ராகுல் செயல்படவில்லை.

மீண்டும் தவறு

மீண்டும் தவறு

ஆனால் ராகுலுக்கு அடுத்த கேப்டன் பதவியை வழங்க பிசிசிஐ முயற்சி செய்வது வரலாற்று தவறாக அமைய வாய்ப்புள்ளது. ராகுல் தற்போது பல சீசன்களில் கேப்டனாக ஐபிஎல் தொடரில் செயல்படுகிறார். ஆனால் செய்த தவறையே திரும்ப செய்கிறார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் நாணி, ராகுலின் கேப்டன்சி பொறுப்பு அவரது ஆட்டத்தை பாதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாணி கருத்து

நாணி கருத்து

இதனால் ராகுல் எந்த அணிக்கு கேப்டனாக செயல்படுகிறாரோ, அந்த அணிக்கு அது பின்னடைவாக அமைகிறது. மேலும் கேப்டன்சி என்பது சொல்லி தந்தோ, கற்று கொண்டோ வருவது அல்ல. இயற்கையாக வருவது. தோனி, கபில்தேவ், இம்ரான் கான் ஆகியோரை பார்த்தாலே அது நமக்கு புரியும். தலைவர்கள் பிறப்பார்கள், உருவாக்கப்படுபவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவிக்கு நோ

கேப்டன் பதவிக்கு நோ

நேற்றைய ஆட்டத்தில் கூட 208 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது ராகுல் 43 பந்துகளில் தான் அரைசதம் அடித்தார். ஆனால் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி இருந்தால் ஆர்சிபியை வீழ்த்தி இருக்கலாம். நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 43 பந்துகளை லக்னோ டாட் பாலாக வீணாக்கியுள்ளது. ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், கேப்டன் பதவிக்கு தகுதி இல்லை.

Story first published: Thursday, May 26, 2022, 21:01 [IST]
Other articles published on May 26, 2022
English summary
KL Rahul is not a born leader and unfit for captaincy- opinion கேப்டன் பதவிக்கு தகுதியே இல்லாதவர் ராகுல்.. வரலாற்று தவறை செய்யும் பிசிசிஐ.. என்ன காரணம்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X