“எங்கயா இருந்த நீ” கே.எல்.ராகுலின் மிரட்டல் சதம் கலக்கத்தில் இருக்கும் சீனியர் வீரர் - காரணம் என்ன?

லண்டன்: இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் அடித்த சதம், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல் தர பயிற்சி போட்டியில் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர்க்கு முன்னதாக அந்நாட்டின் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் துர்ஹாம் நகரத்தில் உள்ள எமிரெட்ஸ் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி, அஜிங்கிய ரஹானே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டார்.

கே.எல்.ராகுல்

அசத்தல் சதம்

அசத்தல் சதம்

அணியின் ஓப்பனின் வீரர்களாக களமிறங்கிய ரோஹித் (9), மயங்க் அகர்வால் (28) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து களமிறங்கிய புஜாரா (21), ஹனுமா விஹாரியும் (24) ஆகியோரும் சொதப்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். 150 பந்துகளை சந்தித்த அவர், 101 ரன்கள் சேர்த்து, ரிட்டையர்ட் அவுட்டானார்.

இந்திய அணி

இந்திய அணி

மறுபுறம் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின்னர் வந்த ஷர்தூல் தாகூர், அக்சர் ஆகியோர் சிறப்பாக சோபிக்கவில்லை. தற்போது பும்ரா (3), சிராஜ் (1) களத்தில் இருக்கிறார்கள். இறுதியில் முதல்நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 306/9 ரன்கள் அடித்துள்ளது.

சீனியர் வீரருக்கு ஆப்பு

சீனியர் வீரருக்கு ஆப்பு

தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இங்கிலாந்து டெஸ்டுக்குள் திரும்பாவிட்டால், கே.எல்.ராகுல் தான் நிச்சயம் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை பண்ட் திரும்பிவிட்டாலும், அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் சீனியர் வீரர் புஜாராவுக்கு பதிலாக ராகுல் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KL Rahul shines with 101 on opening day of Practice match against County XI gives Panic for Senior player in Team india
Story first published: Wednesday, July 21, 2021, 12:33 [IST]
Other articles published on Jul 21, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X