ஐசிசி ரேங்க்.. 10 நாள்ல மறுபடியும் முதலிடத்திற்கு வந்தார் கோஹ்லி.. பும்ராவும் அசத்தல்!

Posted By:

அபுதாபி: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதியுள்ள 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி புதிய தரவரிசை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் சிறந்த அணி, சிறந்த பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் பட்டியில் இடம் பெற்று இருக்கிறது.

ஐசிசி வெளியிட்டிருக்கும் புதிய சர்வதேச ஒருநாள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். ஐசிசி வெளியிட்டிருக்கும் புதிய சர்வதேச ஒருநாள் போட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மீண்டும் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

இந்த ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்ததன் மூலம் சச்சினின் சாதனை முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார் கோஹ்லி.

 அதிவேக ரன்

அதிவேக ரன்

நியூசிலாந்து எதிராக நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கோஹ்லி மிகவும் சிறப்பாக விளையாடி 106 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். இதில் 9 போர்களும், 1 சிக்ஸும் அடக்கம். இது அவரது 32 வது ஒருநாள் செஞ்சுரி ஆகும். மேலும் இந்த போட்டியில் 83 ரன்கள் எடுத்திருந்த போது கோஹ்லி 9,000 ரன்களை அடைந்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார். டிவில்லியர்ஸ் 205 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,000 ரன்களை எடுத்தே இதுவரை சாதனையாக இருந்தது. கோஹ்லி 202 போட்டிகளிலேயே 9000 ரன்களை குவித்து அந்த சாதனையை முறியடித்தார்.

 மேன் ஆப் சீரிஸ் வாங்கிய கோஹ்லி

மேன் ஆப் சீரிஸ் வாங்கிய கோஹ்லி

நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய கோஹ்லி 125 பந்துகளுக்கு 121 ரன்கள் எடுத்தார். புனேயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 29 பந்துகளுக்கு 29 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இவர் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் நேற்று 113 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேன் ஆப் தி சீரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம்

இந்த நிலையில் தற்போது ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருந்த ஏ.பி.டிவில்லியர்ஸை விட அதிக புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்தார். டிவில்லியர்ஸ் பத்து நாட்களுக்கு முன்பு கோஹ்லியை விட அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் கோஹ்லி அவரை முந்தி இருக்கிறார்.

 சசச்சின் சாதனை முறியடிப்பு

சசச்சின் சாதனை முறியடிப்பு

மேலும் இந்த தரவரிசையில் முதல் இடம் பிடித்ததன் மூலம் இவர் சச்சினின் சாதனை ஒன்றையும் முறியடித்து இருக்கிறார். கோஹ்லி 889 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். டிவில்லியர்ஸ் 872 புள்ளிகளோட இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 1998ல் சச்சின் 887 புள்ளிகள் எடுத்ததே இதுவரை பேட்ஸ்மேன் ஒருவர் ஒருவருடத்தில் எடுத்த அதிகபட்ச புள்ளிகள் ஆகும். அதை தற்போது கோஹ்லி முறியடித்து இருக்கிறார்.

 பும்ரா புதிய சாதனை

பும்ரா புதிய சாதனை

இந்த நிலையில் ஐசிசி சிறந்த பவுலர்களுக்கான தரவரிசையையும் வெளியிட்டு இருக்கிறது. இதில் அக்சர் பட்டேல் எட்டாம் இடத்தில் இருக்கிறார். சிறப்பாக விளையாடியும் அதிக ரன் கொடுத்ததால் புவனேஷ்வர்குமார் 14ல் இருந்து ஒரு இடம் பின்னால் சென்று 15வது இடத்தை பிடித்துள்ளார். ஜஸ்பிரிட் பும்ரா முதல்முறையாக 3 இடத்தை பிடித்து இருக்கிறார்.

 ஐசிசி தரவரிசையில் இந்தியா

ஐசிசி தரவரிசையில் இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற போதிலும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணியால் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை. அதன்படி தென்னாப்பிரிக்கா அணி 6386 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணிய 6379 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திலும், டி-20 தரவரிசையில் 5வது இடத்திலும் இருக்கிறது.

Story first published: Monday, October 30, 2017, 17:34 [IST]
Other articles published on Oct 30, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற