அதிக வருமானம் ஈட்டும் வீரர்… போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர்..!!

Kohli in Forbes list | போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய கிரிக்கெட் வீரர்..!!

நியூஜெர்சி:அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் என்று போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், இந்தியாவிலிருந்து கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி முதலிடம் பிடித்துள்ளார்.

இவர், ஊதியம் மற்றும் விளம்பரங்களின் மூலம் மட்டும் 127 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார். இதன்மூலம் இந்தப் பட்டியலில் மெஸ்சி முதல்முறையாக முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 109 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் 2ம் இடத்தில் உள்ளார். மற்றொரு இளம் கால்பந்து நட்சத்திரமான, பிரேசில் அணியைச் சேர்ந்த நெய்மர், 3வது இடத்தைப் பிடித்தார்.

5வது இடத்தில் டென்னிஸ் ஜாம்பவான், சுவிஸ் நாட்டின் ரோஜர் பெடரர் உள்ளார். டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 29.2 மில்லியன் டாலர்களுடன் 63வது இடத்தில் உள்ளார். இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இவர்தான்.

இப்படி ஆகி போச்சே..!! அவசரமாக நாடு திரும்பிய நட்சத்திர வீரர்..!! உலக கோப்பையில் என்ன நடக்குது?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியராக திகழ்கிறார். 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கடைசி இடமான 100வது இடத்தை பிடித்தார்.

கோலியின் ஊதியம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஆனால் விளம்பர ஒப்பந்தங்களின் மூலம் மட்டும் 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் ஈட்டுகிறார். கடந்த ஆண்டில் 83வது இடத்தில் இருந்த கோலி தற்போது 17 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, 100வது இடத்தை பிடித்திருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kohli is the only Indian in Forbes 2019 list.
Story first published: Wednesday, June 12, 2019, 15:24 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X