For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. இங்கிலாந்தெல்லாம் ஓரமா ஒதுங்கு.. டெஸ்ட் மேட்ச்னாலே இந்தியா தான் கெத்து.. அசர வைக்கும் சாதனை!

Recommended Video

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் அசர வைக்கும் சாதன | india achieves another success in test matches

இந்தூர் : பல்வேறு பிரிவுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தொடர்ந்து வரும் நிலையில் அந்த சாதனைப் பட்டியலில் மற்றுமொரு சாதனை தற்போது சேர்ந்துள்ளது.

கடந்த ஆண்டிலிருந்து பல்வேறு டெஸ்ட் போட்டி தொடர்களில் தன்னை எதிர்த்து களமிறங்கிய அணிகளின் மொத்த விக்கெட்டுகளையும் 20 முறை எடுத்ததே அந்த சாதனையாகும். இதில் 18 முறை மொத்த விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தும் 16 முறை ஆஸ்திரேலியாவும் இந்தியாவை தொடர்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வங்க தேசத்திற்கு எதிராக துவங்கியுள்ள டெஸ்ட் தொடரில் முதல்நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி வங்கதேசத்தின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன்மூலம் இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.

 தொடரும் சாதனை பட்டியல்

தொடரும் சாதனை பட்டியல்

கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கி வருகிறது. ஐசிசியின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் பேட்ஸ்மேன் மற்றும் பௌலர் பிரிவில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மேலும் ஆல்ரவுண்டர் பிரிவில் ஹர்தீக் பாண்டியாவும் முன்னிலையில் உள்ளார்.

 தொடர் வெற்றிக்கனி

தொடர் வெற்றிக்கனி

பல சர்வதேச ஒருநாள் போட்டிகள், டி20 தொடர்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாடிவரும் இந்திய அணி, தொடர்ந்து பல போட்டிகளில் வெற்றிக்கனியை சுவைத்து வருகின்றனர்.

 இந்திய வெற்றி மகுடத்தில் சிறப்பு

இந்திய வெற்றி மகுடத்தில் சிறப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை மகுடத்தில் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தற்போது கடந்த ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் தன்னுடன் மோதிய அணிகளின் மொத்த விக்கெட்டுகளையும் 20 முறை வீழ்த்தி இந்தியா சாதனை புரிந்துள்ளது.

 இங்கிலாந்தை தொடரும் ஆஸ்திரேலியா

இங்கிலாந்தை தொடரும் ஆஸ்திரேலியா

இந்த சாதனையில் 18 முறை தனக்கு எதிரான அணிகளின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியும், 16 முறை மொத்த விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

 இந்தியா சாதனை

இந்தியா சாதனை

இதேபோல இன்னிஸ்ங்சை வைத்து பார்க்கும்போது இந்திய அணி கடந்த 2018 முதல் 37 முறை தனக்கெதிரான அணிகளை ஆல்-அவுட் செய்துள்ளது. இதில் இங்கிலாந்து 30 முறையும் இலங்கை 24 முறையும் ஆப்ரிக்கா 24 முறையும் ஆல்-அவுட் செய்து இந்தியாவை தொடர்ந்து முதல் 4 இடங்களில் உள்ளன.

 150 ரன்களுக்கு ஆல்-அவுட்

150 ரன்களுக்கு ஆல்-அவுட்

இதனிடையே இந்தூரில் நடைபெற்றுவரும் வங்க தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 150 ரன்களுக்கு அந்த அணியை இந்தியா, ஆல்-அவுட் செய்துள்ளது. வங்க தேசத்தின் கேப்டன் மோமினுல் ஹாக், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், இசாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Story first published: Friday, November 15, 2019, 13:59 [IST]
Other articles published on Nov 15, 2019
English summary
Indian cricket team achieves another success in test matches
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X