கோஹ்லிக்கு நேரம் நல்லாயிருக்கு... தென்னாப்பிரிக்கா தொடரை வெல்வார்

Posted By: Staff

டெல்லி: தென்னாப்பிரிக்கா மட்டுமல்ல, இந்த ஆண்டு வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜெயமே. அதற்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோஹ்லிக்கு தற்போது நேரம் சரியாக இருப்பதுதான்.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. மழையால் நேற்றைய போட்டி தடைபட்டுள்ள நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தொடர் மட்டுமல்ல, இந்த ஆண்டில், வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் இந்தியா மிகப் பெரிய வெற்றியைப் பெறும். காரணம், கேப்டன் விராட் கோஹ்லியின் நேரம் நன்றாக உள்ளது என்று பிரபல கிரிக்கெட் ஜோதிடர் கூறியுள்ளார்.

சொல்வதெல்லாம் பலிக்கிறது

சொல்வதெல்லாம் பலிக்கிறது

நாக்பூரைச் சேர்ந்த நகை வியாபாரியாக இருந்த நரேந்திர புண்டே, 2006ல் இருந்து கிரிக்கெட் தொடர்பான கணிப்புகளை தெரிவித்து வருகிறார். இதுவரை தான் கூறியது எல்லாம் பலித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

டோணி, சச்சினுக்கும் நடந்தது

டோணி, சச்சினுக்கும் நடந்தது

2019 உலகக் கோப்பைக்கான போட்டிக்கான அணியில் கேப்டன் கூல் டோணி இருப்பார் என்று சமீபத்தில் கணித்து கூறினார் புண்டே. இதற்கு முன்பு, டென்னிஸ் எல்போ காயத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கர் மீண்டு வருவார். அவருக்கு பாரத் ரத்னா விருது கிடைக்கும், சவுரவ் கங்குலி சரிவில் இருந்து மீண்டு வருவார், 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று தான் கணித்த அனைத்தும் உண்மையானதாக அவர் கூறுகிறார்.

ஜாதகத்தோடு அலையும் வீரர்கள்

ஜாதகத்தோடு அலையும் வீரர்கள்

இவருடைய கணிப்புகள் பலித்ததால், பல வீரர்கள், பேட், பாலை போட்டுவிட்டு, ஜாதகக் கையோடு தன்னை பார்க்க வந்ததாகவும் அவர் கூறி வருகிறார். தற்போது கோஹ்லிக்கு செவ்வாய் வலுவாக உள்ளது. அதனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கும். உள்நாட்டில் புலிகளான இந்திய அணி, வெளிநாட்டிலும் வெற்றிகளை குவிக்கும்.

வெளிநாட்டிலும் இந்தியா சாதிக்கும்

வெளிநாட்டிலும் இந்தியா சாதிக்கும்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு இங்கிலாந்துக்கும் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும் செல்ல உள்ளது. இந்தத் தொடர்கள் அனைத்திலும் இந்தியா மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று கற்பூரத்தை அடித்து அணைக்காத குறையாக, சத்தியம் செய்கிறார் புண்டே. இதைவிட இதுவரை உலக கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில், மிகப் பெரிய விளம்பர ஒப்பந்தம் கோஹ்லிக்கு கிடைக்க உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

வீரர்கள் நம்பும் ஜோதிடர்

வீரர்கள் நம்பும் ஜோதிடர்

கங்குலி, முரளி கார்த்திக், ஜாகிர் கான், கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் என்னுடைய ரெகுலர் கஸ்டமர்கள். கிங்ஸ் லெவன் அணியை வாங்குவதற்கு முன், பிரீத்தி ஜிந்தா என்னுடைய ஆலோசனையைப் பெற்றார் என்கிறார் புண்டே. கடந்த ஆண்டு மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு முன், கேப்டன் மிதாலி ராஜ் வந்தார். 33ம் எண் கொண்ட ஜெர்சியை அணியும்படி கூறினேன். அதனால்தான் பைனல்ஸ் வரை இந்தியா முன்னேறியது என்கிறார் அவர்.

விதர்பா கேப்டனுக்கும் ஆலோசனை

விதர்பா கேப்டனுக்கும் ஆலோசனை

அதெல்லாம் விடுங்க. ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு முன்பாக விதர்பா அணியின் கேப்டன் பாயிஸ் பாசல் வந்தார். 24ம் நம்பர் கொண்ட பனியனை அணியும்படி கூறினேன். விதர்பா அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது என்கிறார் புண்டே. உங்களுக்கு புல்லரிப்பது இங்கேயே தெரிகிறது. சரி விடுங்க பாஸ். இதையெல்லாம் நப்பாவிட்டாலும், நம்ப டீம் மீது நம்பிக்கை வையுங்க. கோஹ்லி டீம் ஜெயிக்கும்.

Story first published: Monday, January 8, 2018, 18:06 [IST]
Other articles published on Jan 8, 2018
Please Wait while comments are loading...