For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி சென்றதில் இருந்துதான் பிரச்னையே... வாய்ப்பு கொடுக்கவில்லை.. மன உருகும் குல்தீப் யாதவ்!

சென்னை: தோனி சென்றதில் இருந்து அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஜோடியாக வலம் வந்தவர்கள் குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் ஜோடி. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.

 'முரட்டு' ஜிம்.. அதுவும் வீட்லயே.. 'மிரள' வைக்கும் ஜடேஜா - அசத்தல் வீடியோ 'முரட்டு' ஜிம்.. அதுவும் வீட்லயே.. 'மிரள' வைக்கும் ஜடேஜா - அசத்தல் வீடியோ

அடுத்து வரக்கூடிய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட இந்த ஜோடிக்கு பதிலாக மீண்டும் அணியில் ஜடேஜா - ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

குல்தீப் யாதவிற்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு தற்போதுதான், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பங்கேற்ற குல்தீப் யாதவிற்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கொடுக்கவில்லை. சென்னை மைனாதாம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம். ஆனால் இதில்கூட குல்தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கவலை

கவலை

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள குல்தீப், நான் தோனியையும் அவரது அனுபவத்தையும் மிஸ் செய்கிறேன். தோனி ஸ்டம்பிற்கு பின்னால் நின்று கொண்டு நிறைய யோசனைகளை வழங்குவார். தற்போது ரிஷப் பண்ட் உள்ளார். எனினும் அவர் தன் துவக்க நிலையில் உள்ளார். அவர் எதிர்காலத்தில் ஸ்டம்புக்கு பின்னாலிருந்து பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம். ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் மறுமுனையில் ஒரு சரியான ஜோடி தேவை என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

தோனி போனதில் இருந்துதான்

தோனி போனதில் இருந்துதான்

தோனி அணியில் இருந்தபோது நானும் சாஹலும் ஒன்றாக விளையாடினோம். அவர் ஓய்வு பெற்றதிலிருந்து நானும் சாஹலும் ஒன்றாக விளையாடவில்லை. தோனி ஓய்வு பெற்றதிலிருந்து நான் மிக சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளேன். நானும் ஒரு ஹாட்ரிக் கூட எடுத்தேன். நான் நன்றாக தான் ஆடியிருக்கிறேன். சில நேரங்களில் ஒருவர் என் பந்துவீச்சை நொறுக்கினால், அதன் பிறகு எனது பவுலிங் சரியாக இல்லாதது போன்று தெரியும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 13, 2021, 10:44 [IST]
Other articles published on May 13, 2021
English summary
Kuldeep Yadav gets Emotion on guidance given by MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X