குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ஹாக் செய்த நபர்கள்.. மோசமான படங்கள் வெளியிட்டு தொல்லை

Posted By:
குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்- வீடியோ

டெல்லி: இந்திய வீரர் குல்தீப் யாதவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹாக் செய்யப்பட்டு இருக்கிறது. இது பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

நீண்ட நேரத்திற்கு பின்பே இவர் அக்கவுண்ட் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் அதற்குள் அதில் பல மோசமான படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது ஸ்பின் ஸ்டார் குல்தீப் யாதவ் பதில் அளித்து இருக்கிறார். முக்கியமான விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

போஸ்ட்

போஸ்ட்

அவர் போஸ்ட் ஹாக் செய்யப்பட்ட உடன் அதில் பெண்களின் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இரண்டு அந்தரங்கமான படங்கள் அதில் வெளியாகி இருந்தது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

உடனே புகார்

உடனே புகார்

இது குறித்து வர உடனே புகார் அளித்து இருக்கிறார். உடனே அவரது கணக்கு மீண்டும் மீட்கப்பட்டது. பின் அவர் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் இருந்தும் நீக்கி இருக்கிறார்.

மன்னிப்பு கேட்டார்

இதுகுறித்து குல்தீப் டிவிட்டரில் ''என் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டவில் ஏற்றப்பட்ட தவறான போட்டோவிற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய அக்கவுண்ட்டை யாரோ திருடிவிட்டார்கள். என்னுடைய பாஸ்வேர்டை சரி செய்ய முயற்சி செய்கிறேன். புரிந்து கொண்டதற்கு நன்றி'' என்றுள்ளார்.

தொடர்ந்து நடக்கிறது

தொடர்ந்து நடக்கிறது

இதேபோல் சில நாட்களுக்கு முன் அபினவ் பிந்த்ராவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அப்போதும் அதில தவறான புகைப்படங்கள் ஏற்றப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் பிரபலங்களில் சமுக வலைத்தளங்களில் மட்டும் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 23, 2018, 14:41 [IST]
Other articles published on Feb 23, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற