For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புத்தம் புது புயலே... கண்டியில் வைத்து இலங்கையை நொங்கெடுத்த குல்தீப் யாதவ்!

By Staff

பல்லேகலே: இந்தியாவின் புத்தம் புது சுழற் புயலாக உருவெடுத்துள்ளார் குல்தீப் யாதவ் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா, 487 ரன்கள் எடுத்ததுடன், இலங்கையை, 135 ரன்களுக்குள் சுருட்டி, பாலோஆன் கொடுத்துள்ளது.

ஒரு போட்டி தடையால், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாட முடியாததால், அணியில் சேர்க்கப்பட்டுள்ள, 22 வயதாகும் உத்தர பிரதேச வீரர் குல்தீப் யாதவ், மிகச் சிறப்பாக பந்து வீசி, 40 ரன்களுக்கு, 4 விக்கெட்களை வீழத்தி, அணிக்கு தன்னை தேர்வு செய்தது சரிதான் என்பதை நிரூபித்துள்ளார்.

இடது கை பழக்கமுள்ள குல்தீப் யாதவ், சிறு வயதில், வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அவருடைய கோச் கபில் பாண்டே, இடது கை, சுழற்பந்து வீச்சாளராக முயற்சி செய்யும்படி கூறினார். ஆனால், அவ்வாறு முயற்சிக்கும்போதுதான், இடது கை "சின்னமான்" பவுலரானார்.

சின்னமான் என்றால் என்ன?

சின்னமான் என்றால் என்ன?

அதாவது இந்த பந்துவீச்சின்போது, இடது கை பந்து வீச்சாளர் செலுத்தும் பந்து, தரையில் பட்டு, வலது பக்கம் மிக வேகமாக திரும்பும். இதுவரை இதுபோன்று சுழற்பந்து வீசும் வீரரை, இந்தியா பெற்றதில்லை. இதுவே, இந்திய அணிக்கு குல்தீப் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம்.

ஸ்காட்லாந்துக்கு எதிராக ஹாட்ரிக்

ஸ்காட்லாந்துக்கு எதிராக ஹாட்ரிக்

2012ம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் அவர் விளையாடினார். 2014 உலகக் கோப்பை போட்டியின்போதுதான், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஹாட்ரிக் எடுத்ததுதான், கிரிக்கெட் தேர்வாளர்களை பார்க்க வைத்தது. அந்தத் தொடரில், மொத்தம், 14 விக்கெட்களை வீழ்த்தினார்.

லபமாக கிடைக்காத வாய்ப்பு

லபமாக கிடைக்காத வாய்ப்பு

ஆனாலும் வாய்ப்புகள் சுலபமாக வந்துவிடவில்லை. ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடினார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக, 2014ல் தேர்வானார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிக்கான அணியில் அவர் இடம்பெற்றார். ஆனால், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. காத்திருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடி

இந்தாண்டு பிப்ரவரியில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இருந்தார். ஆனால்,மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் தான் முதல் முறையாக களமிறங்கினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஒரு தினப் போட்டித் தொடருக்கான அணியில் இடம்பிடித்தார். முதல் போட்டி மழையில் பாதித்ததால், பந்து வீச முடியவில்லை. அதற்கடுத்த போட்டியில் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கையில் அதகளம்

இலங்கையில் அதகளம்

இவ்வாறு மிக நீண்ட காத்திருப்புகளுக்கு பிறகு, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், நான்கு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அடுத்து நடைபெற உள்ள, ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். பொறுமைக்கு எப்போதும் பலன் கிடைக்கும் என்பதை, குல்தீப் யாதவ் தேர்வு மீண்டும் நிரூபித்துள்ளது.

அஸ்வின், ஜடேஜா வரிசையில் குல்தீப்பும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Monday, August 14, 2017, 13:34 [IST]
Other articles published on Aug 14, 2017
English summary
Young orthodox bowler Kuldeep Yadav has become the new bowing sensation of Team India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X