For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா என்னா அடி... இனி கிரிக்கெட் ஆடலாமா வேண்டாமா? பந்துவீச்சாளரை புலம்ப விட்ட ரிஷப் பண்ட்

சென்னை: முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்திடம் அதிரடியில் மாட்டிக்கொண்ட ஜாக் லீச், இனி கிரிக்கெட் ஆடலாமா இல்லை விட்டு விடலாமா என்ற புலம்பலுக்கு ஆளாகியுள்ளார்.

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுருண்டது. இதில் இங்கிலாந்து அணி வீரர் சாக் லீச் மொத்தம் 6 விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்நிலையில் இனி கிரிக்கெட் ஆடலமா வேண்டாமா என யோசித்ததாக சென்னை டெஸ்ட்டில் தான் ரிஷப் பந்திடம் மாட்டிக்கொண்ட அனுபவத்தை ஜாக் லீச் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி திணறல்

இந்திய அணி திணறல்

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அபார ஆட்டம் மூலம் 578 ரன்கள் எடுத்தது. இதனால் ப்ரஸர் நிறைந்த சூழலில் முதல் இன்னிங்சில் ஆடத்தொடங்கிய இந்திய அணி 73 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா, கோலி, ரஹானே ஆகியோர் பெவிலியன் திரும்பியிருந்தனர்.

 பண்ட்-ன் அதிரடி

பண்ட்-ன் அதிரடி

இந்திய அணி திணறிய போது களத்திற்குள் வந்த ரிஷப் பந்த் ஆஸ்திரேலிய தொடரில் விட்ட காட்டடியை இங்கிலாந்துடனான தொடரில் தொடர்ந்தார். குறிப்பாக வலது கை பந்துவீச்சாளர் ஜாக் லீச்சின் பந்துகளை சிக்ஸ்ர், பவுண்டரி என பண்ட் துவம்சம் செய்தார். அவரின் பந்துவீச்சில் மட்டும் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகளை ரிஷப் பண்ட் விளாசினார். அவர் மொத்தம் 91 ரன்களை குவித்தார்.

பயம்

பயம்

முதல் டெஸ்ட் போட்டி குறித்து பேசிய ஜாக் லீச், இந்தியாவில் இது என் முதல் கிரிக்கெட் தொடர். ஆனால் பண்ட் இப்படி அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. 8 ஓவர்களில் 77 ரன்களை விட்டுக்கொடுத்ததற்கு பிறகு நான் இனி கிரிக்கெட் விளையாடுவேனா என்பது எனக்கே உறுதியாக தெரியாமல் இருந்தது என தெரிவித்துள்ளார்.

பெருமூச்சு விட்டேன்

பெருமூச்சு விட்டேன்

227 ரன்களில் வெற்றி பெற்றாலும் இவ்வளவு கடினமாக இருக்கும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ரோஹித் சர்மாவை வீழ்த்திய பந்து எனக்கு இந்த தொடர் முழுவதும் உதவும் என கூறுவேன். 4ம் நாள் ரோஹித்தை வீழ்த்தியதால் 5ம் நாளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என பெருமூச்சு விடவேண்டிய அவசியம் இல்லாமல் போனதாக ஜாக் லீச் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 12, 2021, 13:19 [IST]
Other articles published on Feb 12, 2021
English summary
Leach says he was not sure if he play cricket again after pant onslaught
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X