என்ன பாஸ் நடக்குது இங்க.. ப்ரியா வாரியார் அழகில் மயங்கிய தென்னாப்பிரிக்க வீரர்.. போடு லுங்கி டான்ஸ்!

Posted By:
தென் ஆப்ரிக்க வீரர் வரைக்கும் வைரல் ஆனா ப்ரியா வாரியார்- வீடியோ

சென்னை: தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி ப்ரியா வாரியார் கண்ணடிக்கும் வீடியோவை ஷேர் செய்து இருக்கிறார். இதற்கு பலரும் காமெடியாக கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் வெளியான ப்ரியா வாரியார் நடித்து இருக்கும் இந்த பாடல் ஒரு அடார் லவ் படத்தை சேர்ந்தது. கேரளாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ப்ரியாவின் கண்ணசைவு வைரல் ஆனது.

இதை வைத்து பலரும் மீம் கூட போட்டு இருந்தார்கள். தற்போது தென்னாப்பிரிக்காவில் இது வைரல் ஆகி இருக்கிறது.

வீடியோ

ப்ரியா வாரியர் கண்ணசைக்கு வீடியோவில் லுங்கி நிகிடியை சேர்த்து கலாய்த்து செய்து இருக்கிறார்கள். இது பார்க்கவே மிகவும் காமெடியாக இருக்கிறது. லுங்கிக்கு வெறும் 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லுங்கி பதில்

இதை லுங்கி ஷேர் செய்துள்ளார். மேலும் ஹப்பா என்னுடைய வேலண்டைன்ஸ் டே இதோடு முடிந்தது என்றுள்ளார்.

சென்னை அணி

இவர் ஐபிஎல் போட்டிக்கு சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதனால் சென்னை அணியும் இதற்கு பதில் அளித்துள்ளது. சிங்கத்தை கட்டிக்கொள்வது போல வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள்.

மெட்ராஸ்

இது பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது. இவர் மெட்ராஸ் படத்தின் '' இன்னும் இந்த சுவர் யாரெல்லாம் பலி வாங்க போகுதோ'' என்றுள்ளார்.

நம்புங்க

இவர் ''ப்ரோ உங்க நடிப்பு ரொம்ப அழகாக இருக்கு. அதோடு ப்ரியா வாரியார் தென்னாப்பிரிக்க வரை ரீச் ஆகிட்டாங்க'' என்றுள்ளார்.

Story first published: Sunday, February 18, 2018, 14:39 [IST]
Other articles published on Feb 18, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற