For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியில் நீடிக்க டோணி என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?: வார்னிங்குடன் அசாருதீன் அட்வைஸ்

By Veera Kumar

மும்பை: இந்திய கேப்டன் டோணி, தனது ஆட்டத்தின் போக்கை மாற்றாவிட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ தேட வேண்டியதுதான், என்று முன்னாள் இந்திய அணி வீரர் முகமது அசாருதீன் எச்சரித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, இந்திய அணியின் மோசமான ஆட்டம் தொடருவது குறித்து இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படும் அசாருதீன் கூறியதாவது:

ரஹானே செய்த தப்பு என்ன?

ரஹானே செய்த தப்பு என்ன?

ரஹானேயின் பேட்டிங் உத்தியில் எந்த வித பிரச்சினையும் இல்லை. அவரது பொறுமையிலும் பிரச்சினையல்ல. ஆனால் டி20 தொடரில் அவரை அணியில் சேர்க்காதது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா ஏற்கெனவே தோல்வியடைந்து விட்ட பிறகுதான், டி20 தொடரில் ரஹானேவை அணியில் சேர்க்கும் முடிவுக்கே வருகிறார்கள்.

கோஹ்லிக்கு பிறகு ரஹானே

கோஹ்லிக்கு பிறகு ரஹானே

அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ரஹானேவை புறக்கணித்ததை ஏற்க முடியாது. ராயுடுவிற்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் ரஹானே அவரை விடவும் சிறந்த வீரர் என்பதை மறுக்கமுடியாது. விராட் கோஹ்லிக்கு அடுத்ததாக, இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ரஹானே. அவரை எப்படி அணியில் சேர்க்காமல் இருக்க முடியும்?

ரஹானேவிடம் அனைத்து விதமான ஷாட்களும் உள்ளன. அவர் இன்னும் முன்வரிசையில் இறங்க வேண்டும்.

டோணி நிலைமை

டோணி நிலைமை

டோணி, எவ்வாறு அறியப்படுகிறாரோ, அவ்வாறு ஆடவில்லை. ஒரு கேப்டனாக அவர் மீது நெருக்கடி அதிகரித்துள்ளது. டோணி சிறப்பாக, ஆடவில்லையெனில் தேர்வுக்குழுவினர் அவர் குறித்து, பற்றி பரிசீலிக்க வேண்டும். அணியின் வெற்றியிலும், தனது ஆட்டத்திலும், ஏதாவது தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்றால், அணியில் நீடிக்க வேண்டுமென்றால், டோணி வழக்கத்தைவிடவும், முன்வரிசையில் களமிறங்க வேண்டும். அதுதான் எனது ஆலோசனை.

என்னய்யா பெரிய பிஷினர்

என்னய்யா பெரிய பிஷினர்

ஒரு கேப்டனிடம் மற்ற வீரர்கள் என்ன எதிர்ப்பார்க்கின்றனரோ, அதனை டோணி செய்ய வேண்டும். கிரிக்கெட்டில் ‘பினிஷர்' என்ற வார்த்தை அவசியமற்றது. கடைசி கட்டத்தில் களத்தில் நிற்கும் அனைத்து பேட்ஸ்மேன்களுமே பினிஷர்கள்தான். ஒருவரை மட்டும் (டோணியை) குறிப்பிட்டு எப்படி சொல்ல முடியும்.

எல்லாரும் பினிஷர்தான்

எல்லாரும் பினிஷர்தான்

அனைவரிடத்திலும் வெற்றியைப் பறிப்பதற்கான திறன்கள் அவசியம். வெற்றிக்கு 50 ரன்கள் தேவை இருக்கும் போது, ஒரு பேட்ஸ்மேன் 70 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.., அவர்தான் போட்டியை முடித்தும் தர வேண்டும். அதைவிடுத்து, பினிஷர் என்ற பெயர் கொண்ட மற்றொருவரிடத்தில் வெற்றி பெறும் முடிவை விட வேண்டியதில்லை. பினிஷர் என்ற வார்த்தை அதிமதிப்பீடு செய்யப்படுகிறது என்று நான் சந்தேகிக்கிறேன். இவ்வாறு அசாருதீன் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 12, 2015, 10:59 [IST]
Other articles published on Oct 12, 2015
English summary
Former India captain Mohammed Azharuddin criticised the current poor form of India captain Mahendra Singh Dhoni, saying that he is "not the player he used to be" and has to bat up the order.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X