For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு!

Recommended Video

Modi in Maldives | மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி: மாலத்தீவு நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர், தங்கள் நாட்டில் கிரிக்கெட்டை வளர்க்க இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ-யின் உதவியை எதிர்பார்த்து இருப்பதாக கூறியுள்ளார்.

சிறிய தீவு நாடான மாலத்தீவில் கிரிக்கெட் இன்னும் துவக்க நிலையில் தான் உள்ளது. அங்கே சர்வதேச அளவில் கிரிக்கெட் மைதானம் கூட இல்லை.

Maldives expecting technical support from BCCI for developing cricket

தோனி ராணுவ முத்திரை கிளவுஸை அணியக் கூடாது.. அதுதான் சரியான தீர்வு.. ஏன் தெரியுமா?தோனி ராணுவ முத்திரை கிளவுஸை அணியக் கூடாது.. அதுதான் சரியான தீர்வு.. ஏன் தெரியுமா?

இந்த நிலையில் தான், இந்தியாவின் உதவியுடன் கிரிக்கெட் விளையாட்டை வளர்க்க திட்டமிட்டுள்ளது மாலத்தீவு.

மாலத்தீவு நாட்டிற்கு இந்திய பிரதமர் மோடி பயணம் சென்றுள்ளார். தன் முதல் ஐந்து வருடங்களில் மோடி, மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், இரண்டாம் முறை பிரதமராக பதவி ஏற்றவுடன் மாலத்தீவு நாட்டிற்கு சென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்தியாவின் உதவி தேவை என அந்த நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் அஹ்மது மக்லூப் பேட்டி அளித்துள்ளார். பிசிசிஐ-யுடன் வெற்றிகரமான சந்திப்பை நடத்தினோம். அவர்கள் இங்கே கிரிக்கெட்டை வளர்க்க உதவுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டை, பிசிசிஐ தத்து எடுத்துக் கொண்டது போல பிசிசிஐ எங்களுக்கும் உதவும் என எதிர்பார்க்கிறோம் எனவும் கூறி ஆச்சரியம் ஏற்படுத்தினார் அமைச்சர் அஹ்மது மக்லூப்.

காரணம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டை பிசிசிஐ தத்து எடுத்துக் கொண்டது என்பது கொஞ்சம் அதிகப்படியான வார்த்தைகள். ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் தான் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் தனியார் கிரிக்கெட் மைதானங்களை தங்கள் சொந்த மைதானங்களாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கு பிசிசிஐ உதவி செய்து வருகிறது என்பது உண்மை தான் என்றாலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு விஷயங்களில் பிசிசிஐ தலையிடுவதாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்கள் இதுவரை இந்தியாவில் உள்ள தனியார் கிரிக்கெட் பயிற்சி மையங்கள் மற்றும் மைதானங்களைத தான் பயன்படுத்தி வருகிறது.

பிசிசிஐ - மாலத்தீவு தொடர்பு கடந்த 2019 ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்டது. ஐபிஎல் தொடரின் போது மாலத்தீவு அதிபர் சோலிஹ் ஐபிஎல் போட்டியை காண வந்தார். அப்போது பிசிசிஐ அதிகாரிகளிடம், தங்கள் நாட்டிலும் கிரிக்கெட் அணியை உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பிசிசிஐ அதிகாரிகள் குழு ஐபிஎல் முடிந்தவுடன் மாலத்தீவு சென்றது. தற்போது மாலத்தீவில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய அரசாங்கம் மற்றும் பிசிசிஐ உதவ உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Story first published: Saturday, June 8, 2019, 21:37 [IST]
Other articles published on Jun 8, 2019
English summary
Maldives expecting technical support from BCCI for developing cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X