For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: இந்த மலிங்காவை என்னன்னு சொல்றது..! இந்த வயசில் இப்படி பண்ணிட்டாரே..! வீடியோ ரிலீஸ்

கண்டி: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

இலங்கை, நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டையானது. அதனை தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை, 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் அடித்தது.

Malinga now became a highest wicket taker in international twenty 20 cricket

175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது. அந்த அணியில், டி கிராண்ட் ஹோம் மற்றும் டெய்லரின் அதிரடியாக ஆடினர், பேட்டிங்கால் நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் இலங்கை டி20 அணியின் கேப்டனும் சீனியர் பவுலருமான மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.முன்ரோவை வீழ்த்திய அவர், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டி கிராண்ட் ஹோமை ஸ்லோ யார்க்கர் ஒன்றை போட்டு காலி செய்தார். மலிங்காவின் ஸ்பெஷலே அந்த துல்லியமான யார்க்கர் தான். சர்வதேச டி20 கிரிக்கெட்டில், அது மலிங்காவின் 99வது விக்கெட்.

தோனிக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்..! குருவையே மிஞ்சிய சிஷ்யன்..! கிரிக்கெட்டில் நடந்த அந்த சம்பவம்தோனிக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்..! குருவையே மிஞ்சிய சிஷ்யன்..! கிரிக்கெட்டில் நடந்த அந்த சம்பவம்

இதன்மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற அப்ரிடி (98 விக்கெட்டுகள்) சாதனையை காலி செய்திருக்கிறார் மலிங்கா. இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற புதிய மைல்கல்லை எட்டுவார் மலிங்கா. இந்த 36 வயதிலும் அவர் நிகழ்த்திய இந்த சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Story first published: Monday, September 2, 2019, 14:06 [IST]
Other articles published on Sep 2, 2019
English summary
Malinga, now became a highest wicket taker in international twenty 20 cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X