For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகமே திரும்பி பார்த்த அந்த ஒரு கேட்ச்.. என்ன நடக்கிறது? தெரியாமல் அதிர்ந்து போன டி வில்லியர்ஸ்

லண்டன்: டி 20 பிளாஸ்ட் தொடரில், டி வில்லியர்ஸ் விக்கெட்டை அவரது ஸ்டைலில் கேட்ச் பிடித்து வெளியேற்றினார் மேக்ஸ்வாலர். அவரது அந்த கேட்ச் வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் மற்றும் மிடில் செக்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த சோமர்செட் கேப்டன் டாம் ஆபெல் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார்.

தொடக்க வீரர் டாம் பாண்ட்டன் 62 ரன்கள் குவித்தார். அவர்கள் இருவரின் அதிரடியால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது. 227 எண்கள் என்பது கடின இலக்கு. ஆனால், களத்தில் நடந்ததோ வேறு.

என்னால 20 ஓவர்லாம் வெயிட் பண்ண முடியாது.. டி20யில் வெறியாட்டம் ஆடிய இயான் மார்கன்.. புதிய ரெக்கார்டுஎன்னால 20 ஓவர்லாம் வெயிட் பண்ண முடியாது.. டி20யில் வெறியாட்டம் ஆடிய இயான் மார்கன்.. புதிய ரெக்கார்டு

அடித்து நொறுக்கிய மார்கன்

அடித்து நொறுக்கிய மார்கன்

227 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மிடில்செக்ஸ், இயன் மோர்கனின் காட்டடியால் அதிர்ந்து போனது. பந்துகள் பறந்தன. அவரை கட்டுப்படுத்த முடியாமல் பவுலர்கள் திணறினர். 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது.

29 பந்துகளில் 83

29 பந்துகளில் 83

மோர்கன் எதிர்கொண்டது வெறும் 29 பந்துகள். ஆனால் எடுத்தது 83 ரன்கள். அவரது வான வேடிக்கையால் ரசிகர்கள் துள்ளி குதித்தனர். மிடில்செக்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மாலனும் ஸ்டிர்லிங்கும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.

சொதப்பிய ஹபீஸ்

சொதப்பிய ஹபீஸ்

மாலன் 14 பந்துகளில் 41 ரன்களும் ஸ்டிர்லிங் 10 பந்துகளில் 25 ரன்களும் அடித்தனர். டிவில்லியர்ஸும் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஹபீஸ் மட்டுமே சோபிக்கவில்லை. 16 பந்துகளை சந்தித்து, 18 ரன்களே அடித்தார்.

10 ஓவர், 128 ரன்கள்

10 ஓவர், 128 ரன்கள்

ஹபீஸை தவிர மற்ற 3 பேரும் அதிரடியாக ஆடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். மிடில்செக்ஸ் அணி 10 ஓவரில் 128 ரன்கள் அடித்திருந்தது. அதன் பின்னர் தாறுமாறாக அடித்து ஆடிய இயன் மோர்கன், சிக்சர் மழை பொழிந்தார்.

வைரல் கேட்ச்

வெறும் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 83 ரன்களை குவித்து, 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி போட்டியை முடித்து வைத்தார். போட்டியில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டிவில்லியர்ஸின் கேட்ச்சை அவரது பாணியிலேயே அபாரமாக கேட்ச் பிடித்தார் மேக்ஸ் வாலர். அந்த கேட்ச் பற்றிய வீடியோ, இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Story first published: Saturday, August 31, 2019, 21:11 [IST]
Other articles published on Aug 31, 2019
English summary
Max weller takes heart breaking catch to leave de villiers in shock.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X