இப்போதைக்கு இடமில்லை.. இளம் வீரரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த தேர்வுக் குழு!

Mayank Agarwal not be part of WI series | மயங்க் அகர்வாலுக்கு இப்போதைக்கு இடமில்லை

மும்பை : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வரும் 6ம் தேதி இந்திய அணி களமிறங்கவுள்ள தொடரில் இந்திய டெஸ்ட் போட்டிகளின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இடம்பெற மாட்டார் என இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரர்கள் பிரிவில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் இந்த தொடரில் விளையாடப்படவுள்ள நிலையில், ரோஹித் அல்லது ஷிகர் தவான் விளையாடாமல் ஓய்வு எடுக்க விரும்பினால் மயங்க் அகர்வாலுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் தேர்வுக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

 டிசம்பர் 6ம் தேதி துவக்கம்

டிசம்பர் 6ம் தேதி துவக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா மோதவுள்ள தொடர் வரும் 6ம் தேதி துவங்கவுள்ளது. இதில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

 மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை

மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இதேபோல கே.எல். ராகுல் போன்றோரும் இந்த தொடருக்காக தேர்வு செய்யப்படவில்லை.

 அடுத்த நிலையில் மயங்க் அகர்வால்

அடுத்த நிலையில் மயங்க் அகர்வால்

இந்த தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஓய்வெடுக்க விரும்பினால் அடுத்த நிலையில் உள்ள மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 வங்கதேசத்திற்கு எதிராக 243 ரன்கள்

வங்கதேசத்திற்கு எதிராக 243 ரன்கள்

நடந்து முடிந்துள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வால் 215 ரன்களை குவித்தார். இதேபோல தற்போது நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 243 ரன்களை அவர் அள்ளினார்.

 தேர்வுக்குழு அறிவிப்பு

தேர்வுக்குழு அறிவிப்பு

தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கடந்த போட்டிகளில் மயங்க் அகர்வால் வெளிப்படுத்தியுள்ள போதிலும், அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாதது, அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனிடையே, தன்னுடைய வாய்ப்பு வரும்வரை அவர் காத்திருக்க வேண்டும் என்று தேர்வுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 தேர்வுக்குழுவை ஈர்க்க தவறிய மயங்க்

தேர்வுக்குழுவை ஈர்க்க தவறிய மயங்க்

உள்ளூர் போட்டிகளில் 13 சதங்களை அடித்து விளாசிய மயங்க் அகர்வால், கடந்த ஐபிஎல் தொடரில் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணிக்காக களமிறங்கி, 13 போட்டிகளில் 332 ரன்களை மட்டுமே குவித்தார். தற்போத மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறாததற்கு இதுவும் காரணமாக கூறப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mayank Agarwal not in part of West Indies Series Starts in Dec 6
Story first published: Wednesday, November 20, 2019, 13:32 [IST]
Other articles published on Nov 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X