For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜாம்பவான்கள் பட்டியலில் இடம் பிடித்த இளம் வீரர்- சாதனை விவரம் இதோ?

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 2 ஆண்டுகளாக சதமே அடிக்காத மாயங் அகர்வால், இந்த அட்டத்தில் தமக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மாயங் அகர்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பட்டேல் சுழலில் ஆட்டம் கண்டது இந்தியா.. 325 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!பட்டேல் சுழலில் ஆட்டம் கண்டது இந்தியா.. 325 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..!!

4வது சதம்

4வது சதம்

நல்ல பந்தை தொடாமல் விட்டும், மோசமான பந்தை அடித்து ஆடியும் மாயங் அகர்வால் ரன்கள் சேர்த்தார். குறிப்பாக இந்திய வீரர்களை அச்சுறுத்திய ஏஜாஸ் பட்டேலின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார் மாயங் அகர்வால். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 4வது சதத்தை மாயங் விளாசினார்

 தனி மரியாதை

தனி மரியாதை

ஒரு நல்ல டெஸ்ட் வீரர் சதம் அடிப்பதுடன் நிறுத்திவிடாமல், அதனை பெரிய ஸ்கோராக மாற்றுவார்கள். கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேன் 12 முறை இரட்டைசதம் விளாசியுள்ளார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு தனி மரியாதை உண்டு

ஜாம்பவான்கள்

ஜாம்பவான்கள்

இந்திய அணியின் தொடக்க வீரர் மாயங் அகர்வால் தற்போது 4 சதத்தை விளாசியுள்ளார். இதில் மூன்று முறை 150 ரன்களை தாண்டி அடித்துள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சேவாக் 8 முறையும், கவாஸ்கர் 6 முறையும் 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

ஆபத்து

ஆபத்து

தற்போது இந்த பட்டியலில் மாயங் அகர்வால் இணைந்துள்ளார். மாயங் அகர்வால் அந்நிய மண்ணிலும் சிறப்பாக விளையாடினால், அவருக்கு என தனி இடம் இந்திய அணியில் கிடைத்துவிடும். மாயங் அகர்வாலின் சதத்தால் தற்போது கே.எல்.ராகுலின் இடத்திற்கு பாதிப்பு வந்துள்ளது.

Story first published: Saturday, December 4, 2021, 14:31 [IST]
Other articles published on Dec 4, 2021
English summary
Mayank Agarwal scored 150 runs and Joined Elite club. Only Sehwag and Gavaskar scored More 150 runs than Mayank agarwal as opener
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X