For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி டெஸ்ட்டில் மெக்கல்லம் அதிரடி அதகளம்... 54 பந்துகளில் சதம் போட்டு புதிய வரலாறு!

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், தனது கடைசி டெஸ்ட் போட்டியை மறக்க முடியாத சரித்திரமாக மாற்றி விட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிறிஸ்ட்சர்ச் போட்டியில் அவர் உலகின் அதி வேக டெஸ்ட் சதத்தை எடுத்து சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையிலானது 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்த வீச்சை தேர்ந்தெடுத்தது.

இதையடுத்து பேட் செய்யக் களம் இறங்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பமே சொதப்பலாக இருந்தது. 4 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிய நிலையில் மெக்கல்லம் அதிரடியில் குதித்தார். அவரும் கோரி ஆண்டர்சனும் இணைந்து பிரித்து மேய்ந்து விட்டனர்.

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

வந்த பந்தையெல்லாம் நொறுக்கித் தள்ளி விட்டார் மெக்கல்லம். விளைவு பல சாதனைகள் அடுத்தடுத்து வந்து விழுந்தன.

அதி வேக டெஸ்ட் சதம்

அதி வேக டெஸ்ட் சதம்

54 பந்துகளில் மெக்கல்லம் சதம் போட்டு புதிய வரலாறு படைத்தார். இதற்கு விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் 56 பந்துகளில் சதம் அடித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. அதை தற்போது மெக்கல்லம் முறியடித்து விட்டார்.

21 பவுண்டரிகள்

21 பவுண்டரிகள்

மெக்கல்லத்தின் ஸ்கோரில் 21 பவுண்டரிகளம், 6 சிக்ஸர்களும் அடக்கமாகும். மொத்தம் 145 ரன்களைக் குவித்தார் மெக்கல்லம்.

106 சிக்ஸர்கள்

106 சிக்ஸர்கள்

மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 106 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

மெக்கல்லமும், கோரி ஆண்டர்சனும் இணைந்து 110 பந்துகளில் 179 ரன்களைச் சேர்த்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப் ரன்ரேட் 9.76 ஆக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவும் ஒரு சாதனையாகும்.

ஹேக்ளி மைதான ராசி

ஹேக்ளி மைதான ராசி

இன்று போட்டி நடைபெறும் ஹேக்ளி ஓவர் மைதானம் மெக்கல்லமுக்கு ராசியான மைதானமாகும். இங்கு இரு டெஸ்ட் போட்டிகளில் மெக்கல்லம் ஆடியுள்ளார். இரண்டிலுமே சதம் போட்டுள்ளார். மொத்தமாக 340 ரன்களைக் குவித்துள்ளார்.

போட்டிகளை விட சிக்ஸர்கள் அதிகம்

போட்டிகளை விட சிக்ஸர்கள் அதிகம்

மெக்கல்லம் இன்றைய போட்டியுடன் சேர்த்து 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 106 சிக்ஸர்களை விளாசியுள்ளார். விளையாடிய போட்டிகளை விட அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் வரிசையில் 5வது வீரராக உருவெடுத்துள்ளார் மெக்கல்லம். இவரது முன்னோடிகள் ஆடம் கில்கிறிஸ்ட், கிறிஸ் கெய்ர்ன்ஸ், பிளின்டாப், டிம் செளதீ ஆகியோர்.

Story first published: Saturday, February 20, 2016, 14:25 [IST]
Other articles published on Feb 20, 2016
English summary
NZ capatain McCullum has set a new word record straight in his farewell Test at Christchurhc grounds today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X