For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாஸ்டர்ஸ் லீக் டி20: சங்ககாரா அதிரடி உதவியால் அபார வெற்றி பெற்ற சேவாக் அணி

By Veera Kumar

துபாய்: மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 ஆட்டத்தொடரில், விரேந்திர சேவாக் தலைமையிலான, ஜெமினி அரேபியன்ஸ் அணி, தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஜாக் கல்லீஸ் தலைமையிலான லிப்ரா லெஜன்ட்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தியது.

இவ்விரு அணிகள் தவிர்த்து, கில்கிறிஸ்ட் தலைமையிலான, சகிட்டாரியஸ் ஸ்டிரைக்கர்ஸ், பவுல் காலிங்வுட் தலைமையிலான கேப்ரிகோன் கமாண்டர்ஸ், பிரையன் லாரா தலைமையிலான லியோ லயன்ஸ், ஸ்மித் தலைமையிலான விர்கோ சூப்பர் கிங்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

MCL: Sangakkara shines as Sehwag-led Gemini Arabians win opener

துபாயில் நேற்று இரவு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், சேவாக்-கல்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேவாக் அணி, 3விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குமார் சங்ககாரா அதிகபட்சமாக 86 ரன்கள் விளாசினார். சேவாக் தான் சந்தித்த ஆட்டத்தின் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி அமர்க்களப்படுத்தினார். இருப்பினும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இரண்டாவதாக பேட்டிங் செய்த கல்லீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 86 ரன்கள் வித்தியாசத்தில் சேவாக் அணி வென்றது. கைல் மில்ஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

இன்று மாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், காலிங்வுட் அணியும், லாரா அணியும் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு, ஸ்மித் அணியும், கில்கிறிஸ்ட் அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் சோனி சிக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகிறது.

Story first published: Friday, January 29, 2016, 12:37 [IST]
Other articles published on Jan 29, 2016
English summary
Riding on a superb all-round show, Gemini Arabians registered a massive 78-run win over Libra Legends in the opening match of the Masters Champions League (MCL) Twenty20 tournament at the Dubai International Cricket Stadium (DICS) here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X