For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்பாமல் தாளம் போடும் முகமது ஷமி... 6 பந்துகள்... 2 விக்கெட்டுகள்... இந்தியா 86 ரன்கள் முன்னிலை

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னி மைதானத்தில் நடைபெற்றுவரும் பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் முகமது ஷமி 6 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

முதல் இன்னிங்சில் இந்தியா 86 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் இந்த போட்டியில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

194 ரன்களை குவித்த இந்தியா

194 ரன்களை குவித்த இந்தியா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் இன்று துவங்கியுள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.

ஷமி, சைனி 3 விக்கெட்டுகள்

ஷமி, சைனி 3 விக்கெட்டுகள்

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது. முகமது ஷமி 6 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனங்களையும் பெற்றுள்ளார். அவர் மொத்தமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், நவ்தீவ் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ரா 2 விக்கெட்டுகள்

பும்ரா 2 விக்கெட்டுகள்

இந்த போட்டியில் முதலில் இநதியா பேட்டிங் செய்த நிலையில், பும்ரா தனது அரைசதத்தின் மூலம் ஆச்சர்யத்தை கொடுத்தார். மேலும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஷா மற்றும் கில் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். மற்றவர்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான விளையாடவில்லை.

86 ரன்கள் இந்தியா முன்னிலை

86 ரன்கள் இந்தியா முன்னிலை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கிடையில் சிட்னியில் நடைபெற்ற பகலிரவு போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 194 ரன்களை குவித்த நிலையில் அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா ஏ அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதையடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 86 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முகமது ஷமி 6 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Friday, December 11, 2020, 18:06 [IST]
Other articles published on Dec 11, 2020
English summary
Indian Pacers shine as India bowls out Australia-A for 108; leads by 86 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+