மகளுக்கு டோணியின் பிறந்த நாள் பரிசு!

By: SRIVIDHYA GOVINDARAJAN
400 விக்கெட்... தல தோனி புதிய சாதனை!- வீடியோ

டெல்லி:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் புதிய சாதனை படைக்க கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி தயாராக உள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் முதல் இரண்டில் வென்று 2–0 என, இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது ஒருதினப் போட்டி இன்று நடக்கிறது.

MS Dhoni 400

இதில் விக்கெட் கீப்பராக, 400வது விக்கெட்களை வீழ்த்துவதில் உதவி செய்த சாதனையை நிகழ்த்த முடியும். சர்வதேச அளவில் இந்த சாதனையைப் புரியம் நான்காவது விக்கெட் கீப்பராவார் டோணி. இதுவரை 314 ஒருதினப் போட்டிகளில், 399 விக்கெட்களை வீழ்த்தியதில் பங்கேற்றுள்ளார் டோணி. அதில், 294 கேப்ட், 105 ஸ்டம்பிங்.

ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், இலங்கையின் குமார் சங்கக்காரா, தென்னாப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் மட்டுமே 400க்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள்.

404 போட்டிகளில், 482 விக்கெட்களை வீழ்த்தியதில் பங்கேற்று சங்கக்காரா முதலிடத்தில் உள்ளார். கில்கிறிஸ்ட் 287 போட்டிகளில், 472 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பவுச்சர் 295 போட்டிகளில் 424 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

டோணியின் செல்ல மகள் ஜிவாவுக்கு நேற்று பிறந்தநாளாகும். இன்று நடக்கும் போட்டியில் புதிய சாதனையைப் படைத்து, மகளுக்கு பிறந்தநாள் பரிசாக அளிப்பதற்கு டோணி காத்திருக்கிறார்.

Story first published: Thursday, February 8, 2018, 12:01 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற