For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிஷ் நேஹ்ராவும், யுவராஜ் சிங்கும் செம... டோணி "ஷொட்டு"!

மிர்பூர்: ஒரு வருடத்திற்கு முன்பு யுவராஜ் சிங்கும், ஆசிஷ் நேஹ்ராவும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இன்று இருவரும் வாயாரப் புகழப்படுகின்றனர்.

2011ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது யுவராஜ் சிங் மாபெரும் ஹீரோவாக வலம் வந்தவர். அதன் பின்னர் அவர் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார். அதேபோல கடந்த ஆண்டு ஆசிஷ் நேஹ்ரா ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

தற்போது ஆசியாக் கோப்பைப் போட்டியில் இருவரும் முக்கியமான வீரர்களாக மாறியுள்ளனர்.

70 வயசாச்சு!

70 வயசாச்சு!

இரண்டு பேரின் வயதையும் சேர்த்துக் கூட்டினால் 70 வரும். அதாவது நேஹ்ராவின் வயது 36. யுவராஜுக்கு 34 வயதாகிறது இருவரும் டோணியின் தளபதிகளாக முன்பு வலம் வந்தவர்கள். இப்போது மீண்டும் இருவரும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

செம பவுலிங்

செம பவுலிங்

நேற்றைய ஆசியாக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் நேஹ்ராவின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. மிகுந்த ஒழுங்குடன் அவர் நேர்த்தியாக பந்து வீசினார்.

யுவராஜின் அப்ரோச்

யுவராஜின் அப்ரோச்

அதேபோல யுவராஜ் சிங்கின் அப்ரோச் சிறப்பாக இருந்தது. பொறுமையுடன் அவர் ஷாட்டுகளை அடித்தார். 15 ரன்கள்தான் எடுத்தார் என்றாலும் யுவராஜ் சிங்கின் செயல்பாடு டோணியைக் கவர்ந்து விட்டது.

அப்ரோச் சூப்பர்

அப்ரோச் சூப்பர்

இதுகுறித்து டோணி கூறுகையில் அவரது அப்ரோச் மிகவும் சிறப்பாக இருந்தது. எடுத்தவுடன் நாம் எல்லாவற்றையும் செய்து விட முடியாது. நாம் பந்துகளை எப்படி கணித்து எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

நம்பிக்கையுடன் ஆடுகிறார்

நம்பிக்கையுடன் ஆடுகிறார்

யுவராஜ் சிங் நம்பிக்கையுடன் ஆடுகிறார். அவர் வித்தியாசமான வீரர். சரியான சமயத்திற்காக காத்திருக்கிறார். அதற்கு அவருக்கு காலம் தேவை. இதுபோன்ற மேலும் சில சூழல்கள் அவருக்குத் தேவை.

நேஹ்ராவைச் சொல்ல வேண்டியதில்லை

நேஹ்ராவைச் சொல்ல வேண்டியதில்லை

நேஹ்ராவுக்கு சூழலைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. அவரே என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவார். முழுமையான பந்து வீச்சாளர் என்று பாராட்டினார் டோணி.

3 விக்கெட்

3 விக்கெட்

நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 23 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் நேஹ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 25, 2016, 15:17 [IST]
Other articles published on Feb 25, 2016
English summary
Exactly a year ago when India were playing the 50-over World Cup, it was difficult to imagine Yuvraj Singh making a comeback into the team that was brimming with youthful exuberance.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X