For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியை சீண்டிய புனே அணி நிர்வாகம்.. பொங்கியெழுந்த சாக்ஷி.. பதிலடியை பாருங்கள்

'கேப்டன் கூல்' மனைவியான சாக்ஷி எரிமலையாக மாறிவிட்டார். பெண்மணியிடம் சிக்கிக்கொண்டதால் இப்போது மூச் விடாமல் இருக்கிறது புனே அணி நிர்வாகம்.

By Veera Kumar

சென்னை: சி.எஸ்.கே அணிக்கு 2 வருடம் தடை விதிக்கப்பட்டதும், புனே அணிக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்ட டோணி, அங்கும் கேப்டனாக தொடர்ந்தார். ஆனால் கடந்த வருடம் ஐபிஎல் போட்டித்தொொடரில் புனே 7வது இடத்தைதான் பிடித்தது.

சி.எஸ்.கே அணி கேப்டனாக திறம்பட செயல்பட்டவர் டோணி. சி.எஸ்.கே பங்கேற்ற 8 தொடர்களில் ஒன்றில் கூட பிளே-ஆப் சுற்று போகாமல் இருந்ததில்லை. ஆனால் புனே நிலை தலைகீழானது.

இதையடுத்து இவ்வாண்டு ஐபிஎல் தொடரில் டோணி கேப்டன் பதவியிலிருந்து விலக்க வற்புறுத்தப்பட்டார். ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டார். ஆனால், இவ்வாண்டு பேட்டிங்கிலும் டோணி சொதப்பி வருகிறார்.

சீண்டிய நிர்வாகம்

சீண்டிய நிர்வாகம்

இந்த நிலையில்தான், புனே அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா ஒரு ட்வீட் போட்டார். அதில் "காட்டுக்கு யார் ராஜா என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார்" என கூறியிரு்தார் அவர். இதற்கு டோணி ரசிகர்கள் கொந்தளித்தனர்.

டோணி கம்மி

இதன்பிறகு டோணியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளதை வைத்து, மறைமுகமாக கேலி பேசும் வகையில் ஒரு டிவிட் போட்டிருந்தார் ஹர்ஷ் கோயங்கா. ஆனால் டோணி ரசிகர்களோ, புனே அணியை டிவியில் ரசிகர்கள் பார்க்க காரணமே டோணிதான், அவரை கேலி செய்வதா என கொந்தளித்தனர்.

பொக்கிய சாக்ஷி

பொக்கிய சாக்ஷி

இப்படி டோணி தனது சொந்த அணி நிர்வாகத்தால் அவமானப்படுத்துதலுக்கு உள்ளாகிவருவதை பார்த்து பொங்கிவிட்டார் டோணி மனைவி சாக்ஷி. இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக அதை வெளிப்படுத்தியுள்ளார் சாக்ஷி.

ஊழ்வினை தெரியுமா?

கர்மா எப்படி செயல்படும் என்பது குறித்த அந்த பதிவில், "ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளை சாப்பிடும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை சாப்பிடும். நேரமும், சூழலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்" என கூறியிருந்தார்.

எங்க டீம் சி.எஸ்.கேதான்

எங்க டீம் சி.எஸ்.கேதான்

மற்றொரு பதிவில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சி மற்றும் ஹெல்மெட் அணிந்தபடி சாக்ஷி போஸ் கொடுத்துள்ளார். சிஎஸ்கேதான் எப்போதுமே எங்கள் மனதில் உள்ள டீம் என்பதை பதிலடியாக போட்டு காட்டிவிட்டார் சாக்ஷி. 'கேப்டன் கூல்' மனைவி இப்படி எரிமலையாக மாறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பெண்மணியிடம் சிக்கிக்கொண்டதால் இப்போது மூச் விடாமல் இருக்கிறது புனே அணி நிர்வாகம்.

Story first published: Thursday, April 13, 2017, 17:14 [IST]
Other articles published on Apr 13, 2017
English summary
Mahendra Singh Dhoni wife, Sakshi Dhoni, is seen as the fiery one. Sakshi recently posted two updates on Instagram which is seen as taking dig at Rising Pune Supergiant owners.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X