For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலக கோப்பையில் டோணி செயல்பாடு அருமை.. மேற்கிந்திய தீவுகள் மோசம்: சேப்பல்

By Veera Kumar

மும்பை: டி20 உலக கோப்பை தொடரில், மகேந்திர சிங் டோணி, ஒரு கேப்டனாகவும், வீரராகவும் செயல்பட்டார் என்று பாராட்டியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் இயன் சேப்பல், டோணி இந்திய அணியில் தொடர்ந்து ஆட தகுதியானவர் என்று புகழ்ந்துள்ளார்.

டி20 உலக கோப்பை அரையிறுதியில் மேற்கு இந்திய தீவிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

192 ரன்களை குவித்தும் கூட இந்திய பவுலர்களால் அந்த ரன்னை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. போட்டிக்கு பிறகு டோணி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது குறித்த கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

பிரமாதம்

பிரமாதம்

இதுகுறித்து இயன் சேப்பல் கூறியுள்ளதாவது: டி20 உலக கோப்பை தொடரில் டோணியின் செயல்பாடு ஒரு கேப்டனாகவும், வீரராகவும் சிறப்பாகவே இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் அவரை ஒரு சிறந்த கேப்டன் என்று கூற முடியுமோ, முடியாதோ தெரியாது. ஆனால், டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்.

நோ ரெஸ்ட்

நோ ரெஸ்ட்

இதுபோன்ற கேப்டன்தான் இந்திய அணிக்கு தேவை. டோணி ஓய்வு பெற வேண்டிய தேவையில்லை, அவர் இன்னும் சில காலம் இந்திய அணியில் இடம்பிடிக்க எல்லா வகையிலும் தகுதியுள்ளவர்.

நல்ல ரன்

நல்ல ரன்

190 ரன்களுக்கு மேல் குவித்தாலே, அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணம் பேட்டிங் செய்த அணிக்கு வருவது சகஜம். ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிவரும் என்றாலே இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பயம் ஏற்படும்.

ரன் ஓட தெரியாது

ரன் ஓட தெரியாது

அதேநேரம், இந்த ரன்னை மே.இ.தீவுகள் எட்டிப்பிடிக்க காரணம், அந்த அணி வீரர்கள், பவுண்டரிகளும், சிக்சர்களுமாக அடித்ததுதான்., ஏனெனில் மே.இ.தீவுகள் அணி வீரர்கள், இந்தியர்களை போல ரன் ஓடுவதில் கில்லாடிகள் இல்லை.

ஜடேஜா வேஸ்ட்

ஜடேஜா வேஸ்ட்

மே.இ.தீவுகள், ரன் குவிக்க ரவீந்திர ஜடேஜாவின் மோசமான பவுலிங்கும் ஒரு காரணம். பிட்ச் சப்போர்ட் செய்தால் மட்டுமே ஜடேஜாவால் சிறப்பாக செயல்பட முடிகிறது. ஸ்பின் எடுபடாத பிட்சில் ஜடேஜாவால் சோபிக்க முடிவதில்லை. மும்பை போட்டியும் அதற்கு உதாரணம். தன்னை எல்லா பிட்சுக்கும் ஏற்றபடி தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

களதடுப்பு கேவலம்

களதடுப்பு கேவலம்

மே.இ.தீவுகள் அணியின் ஃபீல்டிங்கும், ரன் ஓடுவதும் மோசமாகவே இருந்தது. பவுண்டரிகளும், சிக்சர்களும் அவ்வப்போது அடிக்கப்படவில்லை எனில், வெஸ்ட் இண்டீசால் பெரிதாக சாதிக்க முடியாது. இவ்வாறு சேப்பல் கூறினார்.

Story first published: Saturday, April 2, 2016, 11:54 [IST]
Other articles published on Apr 2, 2016
English summary
The way Mahendra Singh Dhoni has performed in the World Twenty20, he can extend his career as India skipper, says former Australia captain Ian Chappell.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X