For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேவையில்லாமல் போசாதே.. உன் வேலையை மட்டும் பார்.. சர்பிராஸ் கானுக்கு தேர்வுக்குழுவினர் எச்சரிக்கை

மும்பை : ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சதத்திற்கு மேல் சதமாக அடித்துவரும் சர்ப்ராஸ்கான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.

சர்பிராஸ்கான் கடந்த மூன்று சீசன்களின் 2441 ரன்கள் குவித்தும் இதுவரை தேர்வு குழுவினர் அவரைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக 2019 -20 ஆம் ஆண்டு சீசனில் சர்பிராஸ்கான் 928 ரன்களும் அடுத்த சீசனில் 982 ரன்கள் குவித்தார்.

தற்போதைய சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி 556 ரன்கள் விளாசி இருக்கிறார். டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்ற பெருமையும் சர்பிராஸ் கான் படைத்திருக்கிறார்.

கோயிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி.. விதிகளுக்கு உட்பட்டு சட்டையின்றி தரிசனம்.. 2 பேர் மிஸ்ஸிங் கோயிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி.. விதிகளுக்கு உட்பட்டு சட்டையின்றி தரிசனம்.. 2 பேர் மிஸ்ஸிங்

தடை விதிக்கனும்

தடை விதிக்கனும்

இந்த நிலையில் தேர்வு குழுவினர் அவரை தேர்வு செய்யாதது குறித்து சர்பிராஸ்கான் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.இந்த நிலையில் சர்பிராஸ் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மும்பை அணியின் தேர்வு குழு உறுப்பினரான மிலிந்த் ரீஜ் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவது மட்டும்தான் சர்பிராஸ்கான் உடைய பணி.அதை விட்டு தேவையில்லாமல் கருத்து தெரிவித்து வந்தால் எதுவும் நடைபெறாது.சர்பிராஸ்கான் இதுபோன்ற கருத்துக்களை வெளியே சொல்வதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்

புரிந்து கொள்ளுங்கள்

அவருடைய பணி அணிக்காக ரன்கள் சேர்க்க வேண்டும். சர்பிராஸ்கான் அவருடைய பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அணி தேர்வு குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது. சர்பிராஸ்கான் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்கான இடம் இந்திய அணியில் எங்கே இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சர்பராஸ்கானின் ஃபார்ம் மற்றும் திறமையை நம் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

எப்படி செய்யலாம்

எப்படி செய்யலாம்

ஆனால் எப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் வருகிறதோ அப்போது அவருக்கு நிச்சயமாக இடம் கிடைக்கும். ஆனால் இப்போது அவருக்கான இடம் அணியில் இல்லை என்பது உண்மை. மேலும் மும்பை அணியின் பயிற்சியாளராக அமுல் மஜூந்தர் இருக்கும்போது சப்ராஸ்கான் ஏன் தனது தந்தையை பயிற்சிக்கு அழைத்திருக்கிறார். இதை நான் ஒரு செய்தித்தாளில் தான் படித்தேன்.அமுல் மஜுந்தர் போன்ற பயிற்சியாளர் இருக்கும் போது சர்பிராஸ்கான் தனது தந்தையை பயிற்சிக்கு அழைப்பது சரி அல்ல.

இடமில்லை

இடமில்லை

அமுல் மஜூந்தர் எவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவே இல்லை. ஏனென்றால் அப்போது அணியில் இடம் இல்லை என்பதை சர்பிராஸ்கான் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் மும்பை அணியின் கேப்டனும், தற்போதைய மும்பை அணியின் தேர்வு குழு உறுப்பினருமான மிலிந்த் ரீஜ் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 20, 2023, 0:03 [IST]
Other articles published on Jan 20, 2023
English summary
Mumbai selector Millind rege slams sarfaraz khan for making comments on team selection தேவையில்லாமல் போசாதே.. உன் வேலையை மட்டும் பார்.. சர்பிராஸ் கானுக்கு தேர்வுக்குழுவினர் எச்சரிக்கை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X