For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தனி ஒருவனாய்.. சைலண்ட்டாக "சம்பவம்" செய்த முஷ்பிகுர் ரஹீம் - அரண்டு போன இலங்கை

டாக்கா: இலங்கை கிரிக்கெட் அணி, வங்கதேசத்திடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும், இன்றைய போட்டி அதகளம் என்றால் மிகையாகாது.

குசல் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, வங்கதேசத்தில் ஒரு ஷார்ட் டூர் சென்றிருக்கிறது. மொத்தமே மூன்று ஒருநாள் போட்டிகள் தான்.

அதிலும், குறிப்பாக 2023 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதிப் பெறுவதற்கு இரு அணிகளுக்குமே இத்தொடர் மிக முக்கியமான ஒன்றாகும். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது.

 முதல் வெற்றி

முதல் வெற்றி

இதில், கடந்த 23ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேசம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுக்க, சேஸிங் செய்த இலங்கை 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது வங்கதேசம்.

 விக்கெட்டுகள் சரிவு

விக்கெட்டுகள் சரிவு

இந்நிலையில், தொடரை நிர்ணயிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்திற்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 74 ரன்களுக்கு நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. கேப்டன் தமீம் இக்பால் 13 ரன்களும், லிட்டன் தாஸ் 25 ரன்களும் எடுத்து அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷகிப் அல் ஹசன் டக் அவுட் ஆனார்.

 96 ரன்கள்

96 ரன்கள்

எனினும், நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய முஷ்பிகுர் ரஹீம் 111 பந்துகளில் 96 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். மஹ்மதுல்லா 41 ரன்கள் எடுத்து பக்கபலமாக இருந்தார். இதனால் சரிவில் இருந்து மீண்ட வங்கதேசம், 43.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. சதத்திற்கு இன்னும் நான்கே ரன்கள் பாக்கி எனும் நிலையில் ரஹீம் களத்தில் இருப்பதால், நிச்சயம் 250 ப்ளஸ் டார்கெட் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 2023 உலகக் கோப்பை

2023 உலகக் கோப்பை

எப்படியாவது ஒரு உருப்படியான அணியை கட்டமைத்துவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ள இலங்கை, வங்கதேச தொடரை பெரிதும் நம்பியிருந்தது. ஆனால், உள்ளூரில் சூரப்புலியான வங்கதேசத்திடம் இலங்கை பாச்சா பலிக்கவில்லை. அதேசமயம், இப்போட்டியையும் வென்று, தொடரை கைப்பற்றி, 2023 உலகக் கோப்பை டிக்கெட்டை உறுதி செய்வதில் 'இதோ வந்துட்டேண்டா' மோடில் உள்ளது வங்கதேசம்.

Story first published: Tuesday, May 25, 2021, 16:58 [IST]
Other articles published on May 25, 2021
English summary
mushfiqur rahim sl vs ban 2nd odi dhaka - முஷ்பிகுர் ரஹீம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X