For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

142 கிமீ வேகத்தில் பாக்.வீரர் வீசிய பந்து.. நெதர்லாந்து வீரர் தலையில் பட்டது..ரத்தம் சொட்ட விலகினார்

மும்பை: டி20 உலககோப்பையில் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து வீரரை பந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் வெற்றிக்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டத்தில் ஆக்கோரஷமாக பந்து வீசியது.

பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி வீரர்கள் தடுமாறினர். பாகிஸ்தான் வீரர்களின் வேகத்தை பார்த்து, நெதர்லாந்து பேட்ஸ்மேன்களின் கால் பரத நாட்டியமாடியது.

டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல்.. 11 அணிகளை முந்தி முதலிடத்தில் இந்தியா.. சுவாரஸ்ய சாதனையும் உண்டு டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல்.. 11 அணிகளை முந்தி முதலிடத்தில் இந்தியா.. சுவாரஸ்ய சாதனையும் உண்டு

142 கி.மீ வேகப்பந்து

142 கி.மீ வேகப்பந்து

தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டிபன் 11 பந்தில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மேக்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். நட்சத்திர வீரர் பாஸ் டீ லீட் அணியை சரிவிலிருந்து மீட்க வேண்டும் என்று பொறுமையாக விளையாடினார். ஆட்டத்தின் 5.5வது ஒவரில் ஹாரிஸ் ரவுப் 142 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகமாக பந்துவீசினார்.

தாக்கியது பந்து

தாக்கியது பந்து

அப்போது, பந்து, பாஸ் டீ விட் ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. இதில் நிலைத்தடுமாறிய பாஸ் டீ லீட் வலியால் துடித்தார். உடனடியாக பாகிஸ்தான் வீரர்கள், பேட்ஸ்மேனை சூழ்ந்து அவருக்கு உதவினர். இதனையடுத்து, மருத்துவர்களும் மைதானத்துக்கு வந்த பாஸ் டீ லீட்டை ஆய்வு செய்தனர்.

காயம்

காயம்

அப்போது பந்து தாக்கியதில் ஹெல்மெட் கிரில் , பேட்ஸ்மேனின் கண்ணுக்கு கீழ் வெட்டி, ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பேட்டிங் செய்யாமல், ஆட்டத்திலிருந்து விலகினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாம் கூப்பர் 1 ரன்னில் வெளியேற, நெதர்லாந்து அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

91 ரன்களுக்கு அவுட்

91 ரன்களுக்கு அவுட்

கோலின் ஆக்கர்மென் பொறுப்பாக விளையாடி 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் சதாப் கான் 3 விக்கெட்டுகள், முகமது வசீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Story first published: Sunday, October 30, 2022, 15:12 [IST]
Other articles published on Oct 30, 2022
English summary
Netherland batsman Bas de leede injured and retired hurt by facing haris rauf bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X