For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருதினப் போட்டிகளில் அதிக ஸ்கோர்.... நியூசிலாந்து மகளிர் சாதனை.... எவ்வளவு அடித்தார்கள் தெரியுமா!

ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்கோர் என்ற சொந்த சாதனையை, நியூசிலாந்து மகளிர் அணி முறியடித்துள்ளது.

டெல்லி: ஒருதினப் போட்டிகளில் மிகவும் அதிகபட்ச ஸ்கோரை, நியூசிலாந்து மகளிர் அணி பதிவு செய்துள்ளது. ஆண்கள் அணிகள் கூட இந்த சாதனையைப் புரிந்ததில்லை.

மகளிர் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 1115வது ஒருதினப் போட்டியில், நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து மகளிர் அணியினர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 490 ரன்கள் எடுத்தது.

ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் என்ற தனது சொந்த சாதனையை நியூசிலாந்து மகளிர் அணி முறியடித்துள்ளது. ஆண்கள் அணிகள் கூட இந்த சாதனையை எட்டியதில்லை.

நியூசிலாந்து அணியின் கேப்டன் சூசி பேட்ஸ் 94 பந்துகளில் 24 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 151 ரன்கள் எடுத்தார். மேடி கிரீன் 105 பந்துகளில் 17 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 121 ரன்கள் எடுத்தார். கெர் 81 ரன்களும், வாட்கின் 62 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய அயர்லாந்து அணி 35.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருடண்டது. இதன் மூலம் 346 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.

நியூசிக்கு 2வது முறை

நியூசிக்கு 2வது முறை

மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக 400க்கு மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. அதில் நியூசிலாந்து இரண்டு முறை 400க்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா ஒருமுறை 400க்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது.

சாதனை முறியடிப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக 1997ல் நியூசிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 455 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை நியூசிலாந்து அணி முறியடித்துள்ளது.

மும்பையில் சாதனை

ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரு முறை 400க்கு மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, மும்பையில் 1997ல் நடந்த டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 412 ரன்கள் குவித்தது.

ஆண்களில் சாதனை

ஆண்களில் சாதனை

ஆண்கள் கிரிக்கெட்டில் இதுவரை 18 முறை 400க்கு மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிகபட்சமாக பாகிஸ்தானுக்கு எதிராக 2016ல் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Saturday, June 9, 2018, 7:26 [IST]
Other articles published on Jun 9, 2018
English summary
New Zealand women cricket team registered the highest total in odi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X