For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெக்கல்லம் அறிவிப்பு!!

வெளிங்டன்: நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியுடன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் மெக்கல்லம் தனது 100-வது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறார். 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 20-ந் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டியுடன் மெக்கல்லம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதாகும் மெக்கல்லம் கடந்த சில ஆண்டுகளாகவே முதுகுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

New Zeland Bendon McCullum retires from International Cricket

தனது ஓய்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட அவர், நான் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன், எனது தேசத்திற்காக விளையாட, அளிக்கப்பட இந்த வாய்ப்புக்கு நான் நன்றி கூறுகிறேன். தற்போது நான் விடை பெறும் நேரம் வந்துவிட்டது என்றார்.

இலங்கை எதிரான டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்ற மறுநாளே மெக்கல்லம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான கனே வில்லியம்ஸ் இந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள உலகக் கோப்பை டி20 போட்டிகளில் மெக்கல்லம் விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் வலியுறுத்தி வருகிறது.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மெக்கல்லம் 6 ஆயிரத்து 273 ரன்கள் குவித்துள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக ஸ்கோர் 302 ரன்கள். இதேபோல் 254 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 ஆயிரத்து 909 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 166. இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 9-வது ஐபிஎல் தொடரில் ராஜ்கோட் அணிக்காக மெக்கல்லம் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 22, 2015, 12:03 [IST]
Other articles published on Dec 22, 2015
English summary
New Zeland Brendon McCullum announced retirement from International Cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X