For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கைகால் செயலிழந்த நிலையில் பரிதாப வாழ்க்கை...வறுமையில் வாடும் ஒடிஷா முன்னாள் பாக்ஸர்

பதக்கங்கள் பல பெற்ற ஒடிஷா மாநில முன்னாள் குத்துச் சண்டை வீரர் இப்போது வறுமையில் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார். அதுவும் கைகால்கள் செயல் இழந்த நிலையில், என்று அதிரவைக்கின்றன தகவல்கள்.

By Devarajan

புவனேஸ்வர்: பதக்கம் பல வென்று ஒடிஷா மாநிலத்துக்கு பெருமைகள் பல சேர்த்த முன்னாள் குத்துச் சண்டை வீரர், இப்போது வறுமையில் வாடுகிறார். அவரின் உடல் நிலையும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தவிக்கிறார்.

அவரின், கைகால்கள் செயல் இழந்த நிலையில் தவிப்பதை ஊடகங்கள் படம்பிடித்து காட்டுகின்றன. என்ன செய்வதென்று இயலாத நிலையில், இருக்கிறோம் என்று வேதனை தெரிவிக்கிறார் முன்னாள் குத்துச் சண்டை வீரரின் மனைவி.

ஒடிஷா மாநிலம் ரூர்கேலா பகுதியில் வசிப்பவர் ராமுரி சிங்ராய். இவருக்கு இப்போது 42 வயதாகிறது. கடந்த 1980 முதல் 1995 வரையில் ஒடிஷாவின் சக்திமிகுந்த பாக்ஸர் என்ற பெருமையில் வலம் வந்தார்.

 கோப்பைகள் பல வென்றவர்

கோப்பைகள் பல வென்றவர்

பல கோப்பைகள், தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்று ஒடிஷாவின் நம்பர் ஒன் பாக்ஸராக இருந்தார். ஆனால் குடும்ப சூழல் காரணமாக சென்ற 1998ம் ஆண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

 கோச் வாழ்க்கையும் இல்லை

கோச் வாழ்க்கையும் இல்லை

பின்னர், குத்துச் சண்டை கோச் - ஆக பணியாற்றி வருமானம் பார்த்துவந்த ராமுரி, உடல்நிலை ஒத்துவராத நிலையில், கோச் வேலையையும் விட்டுவிட்டார். இப்போது ரூர்கேலாவில் ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை அவரும், அவரின் மனைவியும் ஓட்டி வருகிறார்கள்.

 வறுமை போக்க முன்வராத அரசு

வறுமை போக்க முன்வராத அரசு

இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராமுரி மனைவி, சுக்குருமானி கூறுகையில், " நாங்கள் எங்கள் வறுமை நிலை பற்றி ஒடிஷா மாநில அரசுக்கு தெரிவித்துள்ளோம். விளையாட்டுத்துறை இயக்குனரிடமும் புகார் தெரிவித்துள்ளோம்.

 குடும்பம் நடத்த முடியவில்லை

குடும்பம் நடத்த முடியவில்லை

ஆனால் எந்தப்பலனும் இல்லை. அரசு எங்களுக்கு உரிய முறையில் உதவிட வேண்டும். குடும்பம் இயலாத நிலையில் வறுமை எங்களை வாட்டுகிறது. " என்று நொந்துபோய் தெரிவித்தார்.

 வீரர்களை தூக்கியெறியும் சமூகம்

வீரர்களை தூக்கியெறியும் சமூகம்

கோப்பைகள், பதக்கங்கள் வெல்லும்போது தலைமேல் வைத்துக் கொண்டாடும் அரசு, அதே விளையாட்டு வீரர் ஓய்வு பெற்றுவிட்டால் அவரை குறித்து எந்த ஒரு விஷயமும் தெரியாத நிலையில், முழுக்க கண்டுகொள்ளாமல் விட்டு விடும் என்பதற்கு ராமுரி சிங்ராய் உதாரணமாக திகழ்கிறார்.

Story first published: Saturday, August 19, 2017, 9:22 [IST]
Other articles published on Aug 19, 2017
English summary
Ramuri Singhrai, who was the star and icon for others in field of boxing is now struggling for survival amidst poverty.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X