இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான ஓப்போ வெளியிடும் புது போன்.. எஃப்-7ல் என்ன சிறப்பம்சம்

Posted By:
 OPPO F7: Hitting a sixer out of the chart

சென்னை: இந்தியா பல வேற்றுமைகளால் நிறைந்து இருந்தாலும் அதை எப்போதும் ஒன்றாக இணைக்கும் விஷயங்களில் கிரிக்கெட்டும் ஒன்று. அந்த கிரிக்கெட் உலகிலும் எப்போதும் முக்கிய இடம் வகிக்கிறது சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான ஓப்போ.

''செல்பி எக்ஸ்பர்ட் மற்றும் லீடர்'' என்ற சிறப்பு பெயர் பெற்று இருக்கும் ஓப்போ, புதுமையான ஐடியாக்களால் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருப்பதன் மூலமும் புகழடைந்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் போட்டியை இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஓப்போ நிறுவனம் தன்னுடைய புதிய மாடலான ஓப்போ எஃப்7 ஐ இந்தியாவில் வெளியிட இருக்கிறது.

 OPPO F7: Hitting a sixer out of the chart

சென்ற ஆண்டு வந்த ஓப்போ எஃப்5, ஸ்மார்ட்போன் உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வர இருக்கும் ஓப்போ எஃப்7 வரும் மார்ச் 26ம் தேதி வெளியாக உள்ளது. ஓப்போ எஃப்7 மாடல் தற்போது இருக்கும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டையே மாற்றி அமைக்க இருக்கிறது. ஓப்போ எஃப்7 மாடல் போனில் 6.23 இன்ச் பெரிய எச்டி டிஸ்பிளே இருக்கிறது. மேலும் இதில் சூப்பர் புல் -ஸ்கிரீன் 2.0 பேனல் இடம்பெற்று இருக்கிறது. ஸ்கிரீனுக்கும் போனுக்கும் 10.9 சதவிகித இடைவெளி மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

ஓப்போ எஃப்7 ல் இருக்கும் 25எம்பி கேமராவினால் அதிக துல்லியமான செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் இருக்கும் சென்சார்கள் திறன் காரணமாக மிகவும் குறைந்த ஒளியிலும், அதிக ஒளியிலும் புகைப்படம் எடுக்க முடியும். ஓப்போ எஃப்7 மாடல் போனில் இருக்கும் ஏஐ 2.0 பியூட்டி வசதி மூலம் இதில் புகைப்படங்களை இன்னும் எளிதாக அழகாக மாற்றலாம். இதில் ஏஐ மூலம் இயங்க கூடிய எடிட்டிங், ஆல்பம், ஏஆர் ஸ்டிக்கர் வசதியும் இடம்பெற உள்ளது.

 OPPO F7: Hitting a sixer out of the chart

இந்த மொபைல் வெளியிடப்படுவதை முன்னிட்டு ஓப்போ எஃப்7 வித்தியாசமான போட்டி ஒன்றை சமூக வலைதளத்தில் நடத்தியது. இதில் அவர்கள் காட்டும் மொபைல் போனுக்கு பின் இருக்கும் கிரிக்கெட் பிரபலத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ஓப்போ எஃப்7 போனின் வெளியீடு குறித்த அறிவிப்பு ஓப்போ இந்தியாவின் டிவிட்டர் ஹேண்டில் மூலம் வெளியானது. அதில் ''இதோ வந்துவிட்டது ஓப்போ எஃப்7 போன். இந்த போனுக்கு பின்பாக இருக்கும் இந்திய கிரிக்கெட் பிரபலத்தை கண்டுபிடியுங்கள்'' என்று கேள்வி கேட்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தனர். அதற்கு அடுத்த டிவிட்டிலும் இதேபோல் கிரிக்கெட் வீரரை கண்டுபிடிக்க சொல்லி கேள்வி கேட்டு இருந்தார்கள். கடைசியில் அந்த கிரிக்கெட் வீரர்களின் அடையாளம் வெளியானது. ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓப்போ எஃப்7 போனுக்கு விளம்பரதாரராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த போனின் மிகவும் அழகான வடிவமைப்பிற்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் இவர்களின் தேர்வு மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

 OPPO F7: Hitting a sixer out of the chart

இந்த போனின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஓப்போ எஃப்7 போனின் பினிஷிங் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளது. ஓப்போ எஃப்7ல் இருக்கும் ஓஎஸ் 5.0 வானது ஆண்ட்ராய்ட் 8.1 தளத்தில் இயங்குகிறது. இதனால் இந்த மொபைல் திரையை பார்க்க மிகவும் வசதியாக இருக்கிறது. மேலும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் மூலம் இதில் நம் முகத்தை காட்டி, போனை 0.08 நொடியில் அன் லாக் செய்ய முடியும். இந்த ஓப்போ எஃப்7 மாடல் போன் சோலார் சிவப்பு, நீலம், மூன் லைட் சில்வர் ஆகிய மூன்று நிறங்களில் வெளிவர இருக்கிறது. கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் போல் பின்பற்றப்படுவதால், இந்த ஓப்போ எஃப்7 இளைஞர்கள் மத்தியில் எளிதாக சென்று சேரும்.

பெரிய போட்டி நிலவும் ஸ்மார்ட் போன் உலகில் அடியெடுத்து வைத்து இருக்கும் ஓப்போ, மிக குறைந்த காலத்தில் மிக முக்கியமான இடத்தை தக்க வைத்து இருக்கிறது. 2016 தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சர்வதேச விளம்பரதாரராக ஓப்போ நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரலில் ஓப்போ நிறுவனம் பிசிசிஐ அமைப்புடன் ஒப்பந்தம் செய்து இந்திய அணியின் விளம்பரத்தராக 5 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது ஓப்போ நிறுவனத்திற்கு கிரிக்கெட் மீது இருக்கும் ஆர்வத்தையே வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில்தான் தற்போது ஓப்போ எஃப்7 வெளியீட்டுக்கு ஓப்போ நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியியுடன் சேர்ந்து இருக்கிறது. இந்த போனை கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வர இருக்கும் ஓப்போ எஃப்7 வரும் மார்ச் 26ம் தேதி வெளியாக உள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
In India, if there is anything apart from its vibrant festivals which brings together the whole populace, regardless of the immense cultural diversity, that's undoubtedly Cricket! And, the Chinese mobile handset manufacturer, OPPO has been quick to realise this and has always ensured that it's able to aptly capitalise on the same. OPPO, the "Selfie Expert & Leader", has not only taken the market by storm with its innovative and stylish handsets, but has also created quite a flutter when it earned the coveted sponsorship of the Indian Cricket team.
Story first published: Thursday, March 22, 2018, 14:51 [IST]
Other articles published on Mar 22, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற