For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அல்லா கருணையால் வெற்றி பெற்றோம்.. ஆண்டவன்தான் எங்களுக்கு சுலபமாக்கினார்.. முகமது ரிஸ்வான் உருக்கம்

சிட்னி : டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு அல்லா தான் காரணம் என்று முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

நடப்பு உலககோப்பையில் முதல் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்தியா, ஜிம்பாப்வே அணியிடம் தோற்றதால் பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறிவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் WWE இல் அசைவு அற்று கிடக்கும் அண்டர்டேக்கர் திடீரென்று எழுந்து அமர்வது போல், பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் வென்றது.

டி20 உலககோப்பை இறுதி போட்டியில் மோதுவது யார்? ஏபி டிவில்லியர்ஸ் ஆருடம்.. ரோகித்துக்கு ஆதரவு டி20 உலககோப்பை இறுதி போட்டியில் மோதுவது யார்? ஏபி டிவில்லியர்ஸ் ஆருடம்.. ரோகித்துக்கு ஆதரவு

இறுதி போட்டியில் பாகிஸ்தான்

இறுதி போட்டியில் பாகிஸ்தான்

அப்போதும், அரையிறுதி வாய்ப்பு கிடைக்காத நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோற்றதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 152 ரன்கள் மட்டும் தான் அடித்தது.

அல்லா தான் காரணம்

அல்லா தான் காரணம்

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் அரைசதம் விளாசினார்.இதன் மூலம் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய முகமது ரிஸ்வான், எல்லா புகழும் இறைவனுக்கே. நாங்கள் அல்லாவை நம்பி கடுமையாக உழைத்தோம். நாங்கள் இறுதிப் போட்டிக்கு சென்றால் அது அல்லாஹ் தான் தான் காரணம்.

அல்லாவிற்கு நன்றி

அல்லாவிற்கு நன்றி

குரானில் அல்லாஹ் சொல்வது போல், நான் கடுமையாக உழைத்து, முடிவை அல்லாஹ் கையில் ஒப்படைத்தேன். அல்லாஹ் எங்களை வெற்றி பெற வைத்துவிட்டார். இன்றைய ஆட்டத்திலும் ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக இருந்தது. அதற்கும் அல்லாஹ்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று முகமது ரிஸ்வான் கூறினார். உங்களுடைய நம்பிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் இது என்னுடைய நம்பிக்கை என்று ரிஸ்வான் கூறினார்.

இது தான் திட்டம்

இது தான் திட்டம்

அரையிறுதி போட்டியில் நாங்கள் அரைசதம் அடித்து இருக்கிறோம். நியூசிலாந்துக்கு எதிராக முதலில் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். பவர்பிளே முடிந்த உடன் பிட்ச் தன்மை மாறும் என்பதால் பாபரும், நானும் யாராவது ஒருவர் கடைசி வரை நிற்க வேண்டும் என்று பேசி முடிவு எடுத்து விளையாடினோம் என்று முகமது ரிஸ்வான் கூறினார்.

Story first published: Wednesday, November 9, 2022, 18:49 [IST]
Other articles published on Nov 9, 2022
English summary
Pakistan Batsman Mohammed Rizwan gives credits to allah for team victor
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X