For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினமும் 100 சிக்சர்கள் அடிக்கிறேன்.. பாக். வீரர் ஆசிஃப் அலியின் மிரட்டல் பேச்சு..சூரபுலியா இருப்பாரோ

கராச்சி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs PAK போட்டியில் India தோல்வி தான் காரணம் சொன்ன Sarfaraz Ahmad *Cricket

தீவிர பயிற்சி என்றால் வெறும் பெயருக்கு அல்ல என்பதை விளக்கும் வகையில் தான் தினமும் 100 முதல் 150 சிக்ஸர்கள் அடித்து பயிற்சி எடுப்பதாக ஆசிப் அலி பேசியிருக்கிறார்.

எனினும் ஆசிப் அலியின் இந்த பேச்சு ரசிகர்களிடையே நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித் ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித்

யார் இந்த ஆசிப் அலி?

யார் இந்த ஆசிப் அலி?

30 வயதான ஆசிப் அலி கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக t20 போட்டியில் அறிமுகமானார். ஆறாவது ஏழாவது வரிசையில் களமிறங்கும் அவர் சிக்சர்கள் அடித்து வேகமாக ரன் குவிப்பதில் வல்லவர். 39 போட்டிகளில் விளையாடி 435 ரன்கள் விளாசி உள்ள ஆசிப் அலி அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 133 என்ற கணக்கில் உள்ளது. ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் ஆசிப் அலி நான்காயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

கடினமான சூழல்

கடினமான சூழல்

இதில் ஒரு சதமும் 14 அரை சதமும் அடங்கும். ஆசிய கோப்பையில் இடம் பிடித்துள்ள ஆசிப் அலி, தனது பயிற்சி குறித்து பேசி உள்ளார். இதில் தம்முடைய பேட்டிங் வரிசை என்பது ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் தான் களமிறங்குகிறேன். இதனால் நான் பெரிய ஷார்ட் களை ஆடி ரன் குவிக்க வேண்டும். இதற்காக நான் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

தினசரி 150 சிக்சர்

தினசரி 150 சிக்சர்

தினமும் 100 முதல் 150 சிக்ஸர்கள் நான் பயிற்சியில் அடிக்கிறேன்.அப்போதுதான் என்னால் போட்டியின் போது நான்கு அல்லது ஐந்து சிக்சர் ஆவது அடிக்க முடியும் என்றும் ஆசிப் அலி கூறியுள்ளார் . டி20 கிரிக்கெட்டில் தாம் பேட்டிங் செய்ய வரும் போது கடும் அழுத்தம் எனக்கு இருக்கும் என்று குறிப்பிட்ட ஆசிப் அலி பந்தின் லைன் மற்றும் லெங்த்தை கணித்து தான் பெரிய ஷாட் ஆடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே மாதிரி ஷாட்டை ஆடினால் அது சரி வராது என்பதால் புதிய முறையில் ஷாட்களை ஆடி ரன்குவிக்க பயிற்சி எடுத்து வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வினோத பயிற்சி

வினோத பயிற்சி

பயிற்சியின் போது டேப்பால் சுற்றப்பட்ட பந்தை தான் பயன்படுத்தி விளையாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள ஆசிப் அலி, அப்போதுதான் தமது கவனம் அதிகரித்து ரன் அடிக்க ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆசிப் அலியின் இந்த பேச்சு அடேங்கப்பா 150 சிக்சர் அடிக்கிறாரா என்று சில ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஏற்கனவே டி20 உலக கோப்பையில் ஆசிப் அலி தன்னுடைய பேட்டிங் திறமையை காட்டி இருக்கிறார். இதனால் அவரை குறைத்து மதிப்பிடுவது மிகவும் தவறு.

Story first published: Tuesday, August 23, 2022, 19:56 [IST]
Other articles published on Aug 23, 2022
English summary
Pakistan cricketer Asif ali reveals he his 100 sixers daily in practice தினமும் 100 சிக்சர்கள் அடிக்கிறேன்.. பாக். வீரர் ஆசிஃப் அலியின் மிரட்டல் பேச்சு..சூரபுலியா இருப்பாரோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X