For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் குண்டாக இருக்கிறார்.. பாக் முன்னாள் வீரரின் சர்ச்சை பேச்சு.. இதை பற்றி நீங்க பேசலாமா?

கராச்சி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டி20, ஒருநாள் போட்டிகளில் கடந்த சில ஆட்டங்களாக சோபிக்க தவறவிட்டார்.

இதன் காரணமாக ரிஷப் பண்டை ஒரு நாள் மற்றும் டி20 அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் போர் கொடி தூக்கி வருகின்றனர்.

பண்ட்க்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி.. இப்போதும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடுவார்.. புகழ்ந்து தள்ளிய டீகே! அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி.. இப்போதும் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடுவார்.. புகழ்ந்து தள்ளிய டீகே!

விருப்பப்படி ஆட்டம்

விருப்பப்படி ஆட்டம்

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 48 ரண்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டர்களும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் அளித்துள்ள பேட்டியில் ரிஷப் பண்ட் அவர் விருப்பப்படி விளையாட முயற்சி செய்கிறார்.

வித்தியாசமான ஷாட்கள்

வித்தியாசமான ஷாட்கள்

ஆனால் புது வகையான ஷாட்களை ஆடுகிறேன் என முயற்சி செய்து ஆட்டம் இழந்து விட்டார். ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த முறை மிகவும் வித்தியாசமானது. அவருடைய பேட் மற்றும் கால்கள் ஆகியவற்றில் பந்து பட்டு பிறகு ஸ்டெம்பை அது பதம் பார்த்தது. நான் ரிஷப் பண்ட் குறித்து எப்போதுமே ஒன்றுதான் நான் சொல்வேன். ரிஷப் பண்ட் அவர் உடல் தகுதியை கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட முயற்சி செய்கிறார்.

குண்டாக இருக்கிறார்

குண்டாக இருக்கிறார்

அப்போது அவர் உடல் தகுதி சரியாக இருந்தால் தான் அந்த ஷாட்டுகளை அவரால் தெளிவாக விளையாட முடியும். ரிஷப் பண்ட் ரொம்ப குண்டாக இருக்கிறார்.அவர் இருக்க வேண்டிய எடையை விட தற்போது அதிகம் உள்ளார் என்று பார்த்தாலே தெரிகிறது. அவர் குண்டாக இருப்பதன் காரணமாக அவரால் நினைத்த ஷாட்டை அடிக்க முடிவதில்லை.அவர் உடல் தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ரிஷப் பண்ட் தனது இடையே குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

ரசிகர்கள் பதிலடி

ரசிகர்கள் பதிலடி

சல்மான் பட்டின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வகையில் இருந்தாலும், இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் உடல் தகுதி என்றாலே இருக்காது என்று குற்றம் சாட்டியுள்ளனர். ரிஷப் பண்டை விட பல பாகிஸ்தான் வீரர்கள் குண்டாக இருப்பதாக குறிப்பிட்ட ரசிகர்கள், அவர்கள் குறித்து சல்மான் பட் முதலில் கவலைப்படட்டும் என்று கூறியுள்ளனர்.

யோ யோ டெஸ்ட்

யோ யோ டெஸ்ட்

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை உடல் தகுதிக்கு முக்கியத்துவம் கோலி, ரவி சாஸ்திரி கூட்டணியின் போது தரப்பட்டது. உடல் தகுதியை சோதிக்கும் யோ யோ டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த முறையில் பிசிசிஐ கடினமாக கடைப்பிடிப்பதில்லை.

Story first published: Friday, December 16, 2022, 14:10 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
Pakistan ex Cricketer comments on Rishabh pant weight created controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X