For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி தரவரிசையில் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பரிதாப பாக். #iccranking

By Mathi

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தர வரிசையில் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் நியூசிலாந்தும் 113 புள்ளிகளுடன் உள்ளது.

படுமோசமான நிலையில் பாக்.

படுமோசமான நிலையில் பாக்.

110 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 87 புள்ளியிலிருந்து 86 புள்ளியாக கீழிறங்கியுள்ளது.

முதல் முறையாக..

முதல் முறையாக..

தரவரிசையில் 9வது இடத்திலேயே பாகிஸ்தான் நீடித்து வருகிறது. 2001ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படும் தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் பெற்றுள்ள மிகக்குறைந்த புள்ளி இதுவே. இதனால் 2019 உலக கோப்பை தொடருக்கு நேரடி தகுதி பெறும் அந்தஸ்தையும் இழக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

தக்க வைத்த கோஹ்லி

தக்க வைத்த கோஹ்லி

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி 813 புள்ளியுடன் தொடர்ந்து 2ம் இடத்தை தக்க வைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 887 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.

12-வது இடத்தில் அஸ்வின்

12-வது இடத்தில் அஸ்வின்

ஷிகர் தவான் 8வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களில் டாப்-10ல் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. அஷ்வின் 12வது இடத்தில் உள்ளார்.

Story first published: Tuesday, September 6, 2016, 10:08 [IST]
Other articles published on Sep 6, 2016
English summary
Pakistan's hope of automatic World Cup qualification toughened as they plummeted to their lowest-ever rating of 86 after losing the five-match ODI series 1-4 against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X