கிரிக்கெட் களேபரம்.. இந்தியா நியூசிலாந்தை ஜெயிச்சதால், மகிழ்ச்சியில் துள்ளும் பாகிஸ்தான்!

Posted By:

டெல்லி: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி-20 போட்டியை வென்று சாதனை படைத்து இருக்கிறது. மேலும் இந்தியா வென்றது உலகின் பெஸ்ட் டி-20 அணியாகும்.

 நியூசிலாந்து இந்தியா மோதும் முதல் டி-20

நியூசிலாந்து இந்தியா மோதும் முதல் டி-20

இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ரோஹித், தவான், கோஹ்லி அதிரடியால் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 149 ரன்களுக்கு தோற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி-20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியால் தற்போது இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி அதிக பலன் அடைந்து இருக்கிறது.

 பாகிஸ்தான் முதல் இடம்

பாகிஸ்தான் முதல் இடம்

நேற்றைய போட்டியில் தோற்கும் வரை சர்வதேச டி-20 தரவரிசையில் நியூசிலாந்து அணிதான் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் நியூசிலாந்து தோற்றத்தை அடுத்து தரவரிசை பட்டியலில் கீழே சென்றது. இதன்காரணமாக நீண்ட நாட்களாக முதல் இடத்தில் இருந்து வந்த நியூசிலாந்து 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

 பாகிஸ்தான் தான் இனி பர்ஸ்ட்

பாகிஸ்தான் தான் இனி பர்ஸ்ட்

இந்த டி-20 தொடரில் நாம் என்னதான் சிறப்பாக விளையாடினாலும் பாகிஸ்தான் மட்டுமே இதன் காரணமாக அதிகமான பயனை பெற முடியும். இந்த தொடரில் இந்த சிறப்பாக விளையாடி 3-0 அல்லது 2-1 என எந்த வகையில் டி-20 தொடரை வென்றாலும் பாகிஸ்தான் கண்டிப்பாக முதல் இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா ஒருவேளை 2-1 என்ற கணக்கில் இந்த சிரீசில் தோல்வி அடைந்தால் மிக குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்திற்கு வரும்.

 இந்தியாவுக்கு முதல் இடம்

இந்தியாவுக்கு முதல் இடம்

இயக தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றாலும் இந்தியாவில் அதிகபட்சமாக 2ம் இடத்தை மட்டுமே பிடிக்கமுடியும். தற்போது இந்திய அணி 5 வது இடத்தில் இருக்கிறது. இதையடுத்து ஐசிசி டி-20 தரவரிசையில் இந்தியா முதல் இடம் பிடிக்க வேண்டும் என்றால் டிசம்பர் மாதம் இறுதியில் இலங்கை அணியுடன் நடக்க இருக்கும் டி-20 தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும். நியூசிலாந்து தொடர், இலங்கை தொடர் இரண்டையும் கைப்பற்றும் பட்சத்தில் இந்தியா கண்டிப்பாக முதல் இடத்திற்கு வரும்.

Story first published: Thursday, November 2, 2017, 14:03 [IST]
Other articles published on Nov 2, 2017
Please Wait while comments are loading...