வரவங்களாம் அடிக்கிறாங்களே ! பஞ்சரான பாக்.. ஒரே நாளில் டெஸ்ட்டில் 500 ரன்கள்.. இங்கிலாந்து அணி சாதனை

ராவல்பிண்டி : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 506 ரன்களை குவித்து புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது.

ராவல்பிண்டி நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது பாகிஸ்தானுக்கு அசிங்கம்.. வரலாற்றில் முதல் முறையாக இங்கி, செய்த விஷயம்.. ரசிகர்கள் கோபம்- என்ன ஆனது

சிமெண்ட் சாலை

சிமெண்ட் சாலை

ராவல்பிண்டி ஆடுகளம் சிமெண்ட் சாலை போல இருந்ததால் பந்து பேட்டிற்கு நன்றாகவே வந்தது. ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சு, வேகப்பந்து வீச்சு என எதுவும் எடுப்படவில்லை.இதனால் லட்டு சாப்பிடுவது போல் இங்கிலாந்து வீரர்கள் ரன்களை சேர்த்தனர். பேட்டிற்கு அல்வா போல் பந்து வந்ததால் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து வீரர்கள் அசத்தினர்.

233 ரன்கள் ஜோடி

233 ரன்கள் ஜோடி

தொடக்கவீரர் ஜாக் கிராலி 111 பந்துகளில் 122 ரன்கள் விளாசினார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும் இதேபோன்று மற்றொரு தொடக்கவீரரான பென் டக்கட்டும் சதம் அடித்தார். இதில் 15 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 233 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 23 ரன்களில் வெளியேற ஆலிவ் போப் மற்றும் ஹாரி புருக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.

4 பேர் சதம்

4 பேர் சதம்

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் தடுமாறினர். ஆலிவ் போப் 104 பந்துகளில் 108 ரன்கள் விளாச ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி 81 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் விளாசினார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

506 ரன்கள் குவிப்பு

506 ரன்கள் குவிப்பு

இதன் மூலம் முதல் நாளில் 75 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி 506 ரன்கள் குவித்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. இதனை அடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாள் ஆட்டத்தில் 500 ரன்கள் கடந்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது. பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளத்தை தயாரித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் போன்ற பலமான பந்துவீச்சாளர்களுக்கு இந்த நிலைமை என்றால் ஆடுகளம் எவ்வளவு மோசமாக அமைக்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pakistan vs England 1st test Day 1 - Historic Batting Performance from England batting
Story first published: Thursday, December 1, 2022, 18:49 [IST]
Other articles published on Dec 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X