For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அண்டர்-19 உலக கோப்பை தொடரிலிருந்து நசீம் ஷா நீக்கம்

இஸ்லாமாபாத் : ஜனவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதிவரை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அண்டர் -19 உலக கோப்பை தொடரின்பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் நசீம் ஷா நீக்கப்பட்டுள்ளார்.

நசீம் ஷாவிற்கு மாற்றாக இளம் வீரர் முகமது வசீம் ஜூனியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று தன்னுடைய திறமைகளை நசீம் ஷா சிறப்பாக வெளிப்படுத்திய நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது அவசியம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மேலும் தெரிவித்துள்ளது.

மும்பை அசத்தல் ஆட்டம்.. ஐஎஸ்எல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது!மும்பை அசத்தல் ஆட்டம்.. ஐஎஸ்எல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது!

ஜனவரி 17ல் துவக்கம்

ஜனவரி 17ல் துவக்கம்

அண்டர்-19 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் வரும் 17ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான அணியை இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

3 முறை ரன்னர்ஸ் - அப்

3 முறை ரன்னர்ஸ் - அப்

கடந்த 2004 மற்றும் 2006ல் அண்டர்-19 உலக கோப்பை சாம்பியன் தொடரை வென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 முறை ரன்னர்-அப்பாக இருந்துள்ளது.

பாகிஸ்தானின் முதல் போட்டி

பாகிஸ்தானின் முதல் போட்டி

அண்டர்-19 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு, முதல் போட்டியை ஸ்காட்லாந்து அணியுடன் வரும் 19ம் தேதி அந்த அணி விளையாட உள்ளது. இரண்டாவது போட்டி ஜிம்பாப்வேயுடனும் 3வது போட்டி வங்கதேசத்துடனும் முறையே 22 மற்றும் 24ம் தேதிகளில் பாகிஸ்தான் விளையாட உள்ளது.

"வழக்கமான நடைமுறை"

இந்நிலையில் அண்டர் -19 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் நசீம் ஷா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முகமது வசீம் ஜூனியர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இது வழக்கமான நடைமுறைதான் என்று பிசிபி தெரிவித்துள்ளது.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

கடந்த நவம்பரில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த நசீம் ஷா, தொடர்ந்து சில தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை நிகழ்த்தியுள்ளார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

புதிய வீரர்களுக்கு வாய்ப்பு

இந்நிலையில் நசீம் ஷா, குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்து தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், இதையொட்டி நசீம் ஷா நீக்கப்பட்டு அவருக்கு மாற்றாக முகமது வசிம் ஜூனியருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைமை நிர்வாகி வசீம் கான் தெரிவித்துள்ளார்.

அனுபவம் மிக்க வீரர்கள்

அனுபவம் மிக்க வீரர்கள்

நசீம் ஷாவின் நீக்கத்தால் பாகிஸ்தானுக்காக வெற்றி வாய்ப்பில் எந்த மாறுதலும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ள வசீம் கான், அனுபவம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த மற்ற வீரர்கள் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று கூறினார்.

சிறப்பான பயிற்சி பெறுவார்

சிறப்பான பயிற்சி பெறுவார்

மேலும் பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா நீடிப்பார் என்றும் பௌலிங் கோச் வாக்கர் யூனிசின் கீழ் அவரது பயிற்சி சிறப்பான வகையில் தொடரும் என்றும் வசீம் கான் தெரிவித்துள்ளார். சொந்த மண்ணில் நடைபெறவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவர் இடம்பெறுவார் என்றும் வசீம் கான் கூறினார்.

Story first published: Wednesday, January 1, 2020, 13:52 [IST]
Other articles published on Jan 1, 2020
English summary
Pakistan Naseem Shah Withdraw and replaces Mohammad Wasim Jnr for U-19 World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X