பரபர கிளைமாக்ஸ்.. காது கிழிய கத்திய “பிஎன்ஜி”வீரர்கள்.. டி20 உலகக்கோப்பையில் நாங்களும் இருக்கோம்!

Pappua new Guinea qualifies for 2020 t20 World cup | டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்றது பிஎன்ஜி அணி

துபாய் : ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிஎன்ஜி அணி தேர்வாகி உள்ளது.

அது என்னப்பா பிஎன்ஜி அணி? என்று குழம்பினால் பப்புவா நியூ கினியா அணியை தான் சுருக்கி பிஎன்ஜி அணி என்கிறார்கள்.

ஆஸ்திரேலியா அருகே இருக்கும் தீவு நாடான பப்புவா நியூ கினியா அணி முதன் முறையாக ஒரு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று

டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று

பப்புவா நியூ கினியா அணி டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரில் 14 அணிகளில் ஒன்றாக பங்கேற்றது. இந்த தொடரில் இரு குரூப்களிலும், குரூப் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக 2௦20 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

முதல் இடம் பிடித்த பிஎன்ஜி

முதல் இடம் பிடித்த பிஎன்ஜி

இந்த நிலையில் பப்புவா நியூ கினியா அணி தான் பங்கேற்ற குரூப் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்து நேரடியாக 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

பரபர கிளைமாக்ஸ்

பரபர கிளைமாக்ஸ்

இந்த நல்ல செய்திக்கு முன் ஒரு பரபர கிளைமாக்ஸ் காட்சியை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது பப்புவா நியூ கினியா. ஆம், குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து, அணிக்கும், பப்புவா நியூ கினியா அணிக்கும் முதல் இடம் பிடிப்பதில் போட்டி இருந்தது.

குரூப் ஏ பிரிவு

குரூப் ஏ பிரிவு

குரூப் ஏ பிரிவில் இருந்த ஏழு அணிகளும் தலா ஆறு போட்டிகளில் ஆடின. அதில் பப்புவா நியூ கினியா அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. நெதர்லாந்து அணி தான் ஆடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று இருந்தது.

நெதர்லாந்து அணி நிலை

நெதர்லாந்து அணி நிலை

நெதர்லாந்து அணி தன் ஏழாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி தோற்க வேண்டும் அல்லது நெட் ரன் ரேட் அடிப்படையில் கீழே இருந்தால், பப்புவா நியூ கினியா குரூப் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

பரபர போட்டி

பரபர போட்டி

அந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 130 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 12.3 ஓவர்களில் வெற்றி பெற்றால் நெட் ரன் ரேட்டில் பப்புவா நியூ கினியாவை முந்த முடியும்.

பிஎன்ஜி ஆரவாரம்

பிஎன்ஜி ஆரவாரம்

இந்த நிலையில், நெதர்லாந்து பேட்டிங்கை மைதானத்தில் அமர்ந்து பார்வையிட்ட பப்புவா நியூ கினியா வீரர்கள் ஸ்காட்லாந்து வீசிய ஒவ்வொரு டாட் பால் மற்றும் அவர்களின் பீல்டிங் முயற்சிக்கும் ஆரவாரம் செய்து வந்தனர்.

பிஎன்ஜி கொண்டாட்டம்

நெதர்லாந்து அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டவில்லை என்பதை அறிந்த அந்த அணி வீரர்கள் மைதானத்தில் பெரும் கூச்சல் எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் வெற்றியை கொண்டாடினர்.

அயர்லாந்து தகுதி

அயர்லாந்து தகுதி

நெதர்லாந்து அந்தப் போட்டியில் 17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினாலும் குரூப் சுற்றில் முதல் இடம் பிடிக்க முடியாமல் போனது. குரூப் பி பிரிவில் அயர்லாந்து அணி முதல் இடம் பெற்று டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Pappua New Guinea qualifies for 2020 T20 world cup. Before they qualifies, they had to wait for Netherland vs Scotland match like a climax.
Story first published: Monday, October 28, 2019, 19:57 [IST]
Other articles published on Oct 28, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X