For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உமர் அக்மலின் தடைக்காலம் குறைக்கப்பட வாய்ப்பு - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத் : சூதாட்ட புகாரில் முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் ஒழுங்கு நடவடிக்கை குழு அக்மலின் விரிவான தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளதால், அவரது தண்டனை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Part Of Umar Akmals Ban Could Be Suspended: Report

தன்மீதான தடை குறித்து அக்மலுக்கு அறிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கிய உமர் அக்மல் குறித்த புகாரை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி மிரான் சோஹான் அவருக்கு 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து கடந்த திங்களன்று உத்தரவிட்டிருந்தார். இதற்கு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஒயிட் பால் கிரிக்கெட்டுல உலகத்துலயே சிறந்த வீரர் அவர்தான்... உணர்ச்சிவசப்பட்ட கவுதம் கம்பீர்ஒயிட் பால் கிரிக்கெட்டுல உலகத்துலயே சிறந்த வீரர் அவர்தான்... உணர்ச்சிவசப்பட்ட கவுதம் கம்பீர்

இந்நிலையில் அவர் மீதான தடைக்காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விரிவான தீர்ப்பை வழங்கவுள்ள நிலையில், ஊழல் தடுப்புக்குழுவின் கீழ் மற்றும் அவரது முந்தைய சாதனைகளின் அடிப்படையில் அவரது தண்டனை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு கையில் கிடைத்த 14 நாட்களுக்குள் அவர் இதுகுறித்து முறையீடு செய்யவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் பிசிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் வீரர் சர்ஜில் கானுக்கு சூதாட்ட புகாரில் 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட நிலையில், இதேபோல அவருக்கு அதில் பாதி வருடங்கள், அதாவது இரண்டரை வருடங்கள் தடை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 30, 2020, 19:39 [IST]
Other articles published on Apr 30, 2020
English summary
A PCB source said part of his sentence could be suspended
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X