கிரிக்கெட் வர்ணனை: கலப்படச் சாக்கடையா தமிழ்?

"All rounder and Fast Bowler. அவர்தான் இப்ப Fast bowling coach. And Packistan... இந்த venueவைப் பொறுத்தவரைக்கும் Fourteen wickets India எடுத்திருக்காங்க. அதுல ஆறு Run Outடு."

"So Run outடுக்கு வர்ற மாதிரி bowling போடணும்னு சொல்றீங்க... ரொம்ப ரொம்ப முக்கியக் கஷ்டமான விஷ்யம்.... எறங்கி... sixerஆனு பார்க்கலாம். comfortable pull shot. கிட்டத்தட்ட பத்து Run போயிருக்கு. முதல் பந்தயே attack பண்ணியிருக்காரு. நல்ல Strategy. bowlers எப்பவும் பார்த்தீங்கன்னா முதல் பந்த எதிர்பார்க்க மாட்டாங்க... Batsman shotடுக்குப் போவார்னு... இது Ground நல்லாருக்குன்ற விஷ்யத்த சொல்லுது.இதுதான் இவங்களோட Normal batting Strength. தொண்ணூத்தி ஆறு meter sixசுக்குப் போயிருக்கு. நிறையா பிரியாணி சாப்பிட்டிருப்பாய்ங்கன்னு நினக்கிறேன்."

Pathetic cricket commentary in Tamil

"நல்ல shotடு. என்னன்னா ஒரு Indian fan catchu புடிச்சிருக்காரு. indian player புட்சிர்ந்தார்னா அது outடு. ஆனா indian fan superbஆ புட்சிர்க்காரு. crowdல... So இப்ப வேற Game Shift பண்றாரு...Width குட்த்து... Square cut... ஒரு Boundary..."

**
பத்துக்கு நான்கு சொற்கள் ஆங்கிலம்.
பெயர்ச்சொற்கள் எவ்லாமே ஆங்கிலம்.
கலைச்சொற்கள் எல்லாமே ஆங்கிலம்.

புதுக் கலைச்சொற்கள் ஆக்கப்படவே இல்லை.
இனியும் ஆக்கப்படுவதற்கான அறிகுறியுமில்லை.
அம்முயற்சியில் ஈடுபடுவோரும் இல்லை.
ஈடுபடுவோரை ஊக்கிவிடுவோரும் இல்லை.

அரசுக்கும் உணர்த்தியில்லை.
குடிகட்கும் உணர்த்தியில்லை.

இதைச் சொல்பவனுக்கும் உரிய தமிழ் தெரியாது.
இதைக் கேட்பவனுக்கும் உரிய தமிழ் தெரியாது.
ஆனால், தமிழில் விளையாட்டுத் தொலைக்காட்சி.
எது தமிழ் ?

கலப்படச் சாக்கடையா தமிழ் ?
பிறமொழிச் சீழ்வடிவா தமிழ்ச்சொல் ?

எங்கும் கலப்படம்
உண்பொருள் கலப்படம்

குழவிப்பால் கலப்படம்
தாய்மொழியில் கலப்படம்

எதைக் கொடுத்தாலும் தின்கிறோம்.
எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்கிறோம்.
எதைச் சொன்னாலும் தமிழென்றே நினைக்கிறோம்.
நமக்கு வெட்கம் மானம் சூடு சுரணை இல்லை.
எப்படியோ ஒழியலாம்....!

- கவிஞர் மகுடேசுவரன்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary
  The recent Tamil commentary for cricket during Champions Trophy looks pathetic and ugly.
  Story first published: Monday, June 19, 2017, 9:06 [IST]
  Other articles published on Jun 19, 2017
  POLLS

  myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more