For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களை நேரில் சந்தித்து மோடி வாழ்த்து

By Veera Kumar

டெல்லி: ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள தடகள வீரர், வீராங்கனைகளை டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரேசில் நாட்டு தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 5 முதல் 21ம் தேதிவரை நடக்கிறது. இந்தியா சார்பில் 13 வகையான போட்டிகளில் இருந்து இதுவரை சுமார் 100 பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

PM Narendra Modi to meet Rio Olympics-bound Indian athletes on July 4

2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 வீரர்கள் பங்கேற்ற நிலையில், இம்முறை, அதைவிட அதிகம் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளை டெல்லி, மானக்ஷா மையத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து அவர்களை வாழ்த்தினார்.

அப்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், விளையாட்டுத்துறை செயலாளர் ராஜிவ் யாதவ், அனைத்திந்திய விளையாட்டு கவுன்சில் (ஏஐசிஎஸ்), சேர்மன் விஜய் மல்கோத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ராஜிவ் மேதா, ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பாத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

60 sec: ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள தடகள வீரர், வீராங்கனைகளை டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், விளையாட்டுத்துறை செயலாளர் ராஜிவ் யாதவ், அனைத்திந்திய விளையாட்டு கவுன்சில் (ஏஐசிஎஸ்), சேர்மன் விஜய் மல்கோத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ராஜிவ் மேதா, ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பாத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

Story first published: Monday, July 4, 2016, 15:20 [IST]
Other articles published on Jul 4, 2016
English summary
Prime Minister Narendra Modi will meet the Indian athletes who will represent the country at the forthcoming Olympic Games in Rio de Janeiro, Brazil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X