For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வருங்கால சச்சின் ரொம்ப பாவம்..! இருமல் மருந்து குடிச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா?

மும்பை: இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு அளித்த தண்டனை மிக அதிகம் என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா. வருங்கால டெண்டுல்கர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். அவரது திறமையை கண்டு வியந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் பிரித்வி ஷாவுக்கு விருந்து வைத்து அசத்தினார்.

இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் ஜாம்பவான் சச்சினின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்தன. பிரித்வி ஷாவை விளையாட்டை அதன் பிறகு அனைவரும் உற்று பார்க்க ஆரம்பித்தனர்.

சோதனை

சோதனை

ஆனால், சையது முஷ்டாக் தொடரில் விளையாட கடந்த பிப்ரவரியில் அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தினை அவர் உட்கொண்டது உறுதிப்படுத்தப் பட்டது.

நவ. 15 வரை தடை

நவ. 15 வரை தடை

அதனை தொடர்ந்து பிரித்வி ஷாவிற்கு நவம்பர் 15ம் தேதி வரை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகில் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை பரபரப்பாக பேசப்பட்டது.

வெங்சர்க்கார் ஆதரவு

வெங்சர்க்கார் ஆதரவு

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை கடுமையானது என்று முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கருத்து கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மிக எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரித்வி ஷா.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

அவரது வயதை கருத்தில் கொண்டு தண்டனையை குறைத்து கொடுத்து வைத்திருக்க வேண்டும். சாதாரண குடும்பத்திலிருந்து வரும் வீரர்கள் ஊக்க மருந்துகள் எவை என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பே இருந்திருக்காது.

தெளிவாக சொல்ல வேண்டும்

தெளிவாக சொல்ல வேண்டும்

அதனை கிரிக்கெட் அமைப்போ, தேசிய கிரிக்கெட் அகாடமி தெளிவாக சொல்ல வேண்டும். இருமல் மருந்தில் என்ன இருக்கும் என்பது பிரித்வி ஷாவுக்கு தெரியாது. நீங்கள் தான் புரிய வைத்திருக்க வேண்டும்.

குறைக்க வேண்டும்

குறைக்க வேண்டும்

எனவே அவர்கள் தண்டனையை குறைக்கலாம். அதற்கு பதிலாக நிபந்தனைகளுடன் போட்டியில் விளையாட சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். இல்லா விட்டால் 3 மாதங்கள் அவருடைய தண்டனை காலத்தை குறைத்து இருக்கலாம் என்றார்.

Story first published: Saturday, August 3, 2019, 19:20 [IST]
Other articles published on Aug 3, 2019
English summary
Punishment for Prithvi shaw is harsh says former captain Dilip Vengsarkar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X